151.இலங்கையின் தற்போதைய சீயம் நிக்காய சமயப் பிரிவு ஆரம்பமாக காரணமாக இருந்த மன்னன் யார்?
* கீர்த்தி ஸ்ரீ ராஜ சிங்கன்
152.கி.பி. 1753 இல் உபசம்பதா சடங்கை நடாத்த இலங்கைக்கு வந்த பிக்குகளின் குழுவிற்கு தலைமை தாங்கிய தாய்லாந்து பிக்கு யார்?
*உபாலி தேரர்
153.கி.பி. 1762 இல் கண்டி இராசதானிக்கு வருகை தந்த ஆங்கில தூதுவன் யார்?
*ஜோன் பைபஸ்
154.கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னனை சந்தித்த ஆங்கில தூதுவன் யார்?
*ஜோன் பைபஸ்
155.ஜோன் பைபஸ் எனும் ஆங்கில தூதுவன் கண்டி இராச்சியத்திற்கு வருகை தந்ததன் மூலம் அச்சமடைந்த ஒல்லாந்து ஆளுனர் யார்?
*பன் எங்கள் பெக்
156.கி.பி. 1762 இல் கண்டி இராச்சியத்தின் மீது ஆறு படை பிரிவுகள் மூலம் கண்டி இராசதானியை ஆக்கிரமித்த ஒல்லாந்து ஆளுநர் யார்?
*பன் எங்கள் பெக்
157.கண்டி இராசதானிக்கு 06 பாதையினுடாக படையனுப்பி தோல்வியை தழுவிக் கொண்ட ஒல்லாந்து ஆளுனர் யார்?
*பன் எங்கள் பெக்
158.கி.பி. 1765 பெப்ரவரி மாதத்தில் ஒல்லாந்தரால் கைப்பற்றபட்ட கண்டி இராச்சியத்தின் நகரம் எது?
159.கி.பி. 1765 ஒல்லாந்த அக்ககிரமிப்பில் கண்டி மன்னன் ஒழிந்து கொண்ட இடம் எது?
*ஹிங்குரான்கெத்த
160.கி.பி. 1765 இல் கண்டி நகரை கைபப்ற்றிய ஒல்லாந்தர் எதிர் நோக்கிய பிரச்சினை யாது?
*மழைக்காலம் தொடங்கியமை
*நோய்கள் பரவியமை
161.கி.பி. 1766 இல் ஆண்டு ஒல்லாந்தருடன் சமாதானமான உடன்படிக்கை செய்த கொண்ட மன்னன் யார்?
*கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னன்
162.கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னன் ஒல்லாந்தருடன் சமாதானம் மேற்கொண்டதால் மன்னன் மீது வெறுப்படைந்த நபர்கள் 02ஐ குறிப்பிடுக?
*பிரதானிகள்
*பௌத்த பிக்குகள்
163.கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னனுடன் 1766 இல் உடன்படிக்கை செய்து கொண்ட ஒல்லாந்து ஆளுநர் யார்?
*விலெம் பெல்க்
164.கி.பி. 1766 இன் ஒல்லாந்தர் கண்டி இராசதானியுடன் செய்து கொண்ட உடன்படிக்கையில் உறுப்புரைகளின் எண்ணிக்கை யாது?
*25
165.கி.பி. 1766 ஆம் ஆண்டு உடன்படிக்கையில் கையொப்பமிட்ட இரு கூட்டத்தினை குறிப்பிடுக?
*ஒல்லாந்த்தர்
*கண்டி மன்னன்
166.கி.பி. 1766 உடன்படிக்கையிலுள்ள சரத்துக்கள் ஃ உறுப்புரைகள் 02ஐ குறிப்பிடு?
*யாழ்ப்பாணம், மன்னார்,கற்பிட்டி ,கொழும்பு திசாவை ,காலி ,கோறளை,திருகோணமலையை சூள உள்ள பிரதேசங்கள் ஒல்லாந்தருக்கு உரித்தானவை
*கரையோரம் தொடக்கம் நாட்டின் உட்பகுதி ஒரு கவ்வை (6km) அளவு நிலம் ஒல்லாந்தருக்கு உரியவை
167.கண்டி இராசதானியின் பரந்த நிலப்பரப்பை ஒல்லாந்தருக்கு சொந்தமாக்கி கண்டி இராச்சியத்தின் அதிகாரத்தை குறைத்த உடன்படிக்கை எது?
*கி.பி. 1766 ஆம் ஆண்டு உடன்படிக்கை
168.கண்டி இராசதானியை இலங்கை தீவுக்குள் அமைந்த மற்றொரு தீவாக மாற்றிய உடன்படிக்கை எது?
*கி.பி. 1766 ஆம் ஆண்டு உடன்படிக்கை
169.கி.பி. 1766 ஆம் ஆண்டு உடன்படிக்கையை மீறி ஒல்லாந்தர் மேற்கொண்ட நடவடிக்கை எது?
*மன்னருக்கு உரித்தான பிரதேசங்களுக்கு உப்பு வழங்குவதை தடை செய்தமை
170.கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னன் மரணமடைந்த ஆண்டைக் குறிப்பிடுக?
*1782
172.கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னனுக்கு பின் கண்டி இராச்சியத்திற்கு அரசனான மன்னன் யார்?
*இராஜாதி இராஜ சிங்கன்
173.ஒல்லாந்தர் இலங்கையில் ஆட்சியதிகாரங்களை நிலைநாட்டிய பிரதேசங்களை கைப்பற்றிக் கொண்ட ஐரோப்பியர் யார்?
*பிரித்தானியர்
174.இராஜாதி இராஜசிங்க மன்னன் ஆட்சிக்கு வந்த ஆண்டை குறிப்பிடுக?
*1782
ஒல்லாந்தரின் ஆட்சியில் சமூக, பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகள்
175.ஆசியாவில் ஒல்லாந்து நிர்வாக பிரதேசம் தொடர்பாக தீர்மானத்தை மேற்கொண்ட உயர் குழு எது?
* VOC சங்கம்
176.ஆசியாவில் அமைந்த ஒல்லாந்து தலைமையகம் எது?
* பத்தேவியா
177.ஒல்லாந்து தலைமையகமான பத்தாவியாவிற்கு ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்ட ஆண்டைக் குறிப்பிடுக?
*16௦9
178.பத்தேவியாவுக்கு ஒல்லாந்து மன்னனால் நியமிக்கபட்ட ஆளுநருக்கு உதவி வழங்கிய சபை எது?
*ஆலோசனை சபை
179.இலங்கைக்கு தனியான ஒல்லாந்து ஆளுநரை நியமித்த அமைப்பு எது?
* ஒல்லாந்த வர்த்தக சங்கம்
180.இலங்கையின் ஒல்லாந்து ஆளுநருக்கு உதவி வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட சபை எது?
* விசேட சபை (உதவி சபை )
181.இலங்கை ஆளுநரும் அவரின் உதவிச் சபையும் கீழ்பட்டிருந்த நபர் யார்?
*பத்தேவியா அதிகாரி
182.இலங்கையின் ஒல்லாந்து ஆளுனருக்கு நேரடியாக ஒல்லாந்து மன்னனுடன் தொடர்பு கொள்ள முடியுமாக இருந்தமைக்கு ஆளநரிடமிருந்த சிறப்பு பண்புகள் 02ஐ குறிப்பிடுக?
*திறமை
*ஆளுமை
183.இலங்கையிலிருந்த ஒல்லாந்து ஆளுநர் அவசர நடவடிக்கைகளின் போது சுதந்திரமான தீர்மானம் ஒன்றை எடுக்கும் அதிகாரத்தை பெற்றமைக்கான காரணங்கள் 02ஐ குறிப்பிடுக?
* இலங்கை , ஒல்லாந்து ,பத்தேவிய போக்குவரத்துக்கு நீண்ட காலம் எடுத்தமை
*தொடர்பாடலில் கஷ்டங்கள் நிலவியமை
184.இலங்கையில் ஒல்லாந்தரின் கீழ் இருந்த பிரதேசங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தினை பெற்றிருந்த இரு தரப்பினரையும் குறிப்பிடுக?
*ஒல்லாந்த ஆளுனரும் அவரது ஆலோசனை சபையும்
185.ஒல்லாந்த ஆளுநரின் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆலோசனை பெற்ற அமைப்பு எது?
* ஆலோசனை சபையும்
186.இலங்கையின் ஒல்லாந்து ஆளுநரும் அவருடைய ஆலோசனை சபையும் முன்னெடுத்த நிர்வாக நடவடிக்கைகளை குறிப்பிடுக?
*கோமான்டரிகளை உருவாக்குதல்
*நீதி மன்றங்களை உருவாக்குதல்
187. இலங்கையின் கரையோரப் பகுதியை ஒல்லாந்தரின் ஆட்சியின் கீழ் பிரிக்கபப்டட பகுதிகளின் எண்ணிக்கை யாவை?
*3
188.ஒல்லாந்தரின் ஆட்சியில் நிர்வகிக்கப்பட்ட இலங்கையின் கரையோரப்பகுதிகளுக்கு வழங்கப்பட்ட பெயர் யாது?
* கொமாண்டரிகள்
189.ஒல்லாந்தர் நிர்வாகம் செய்த இலங்கைக் கொமாண்டரிகள் 03ஐ குறிப்பிடுக?
* கொழும்பு கொமாண்டரி
* யாழ்ப்பாணக் கொமாண்டரி
* காலிக் கொமாண்டரி
190.கொழும்புக் கொமாண்டரியை நிர்வாகம் செய்த நபர் யார்?
*இலங்கை ஆளுனரும் ஆலோசனை சபையும்
191.கொழும்புக் கொமாண்டரிக்கு உட்பட்ட நிர்வாகப் பிரதேசங்கள் 03ஐ குறிப்பிடுக?
*கொழும்பு
*களுத்துறை
*நீர் கொழும்பு உட்பட கரையோர பிரதேசம்
192.பொழும்புக் கொமாண்டரிக்குள் உட்பட்ட நாட்டின் உட்பிரதேசங்கள் 04ஐ குறிப்பிடுக?
* ஹுங்வெல்ல
* அங்குருவதொட்ட
*மல்வானை
*கோட்டை
193.காலிக் கொமாண்டரியை நிர்வாகம் செய்த நபர் யார்?
* கொமான்டர்
194.காலி கொமான்டரிக்கு உட்பட்ட நிர்வாக பகுதிகளை குறிப்பிடுக?
*மட்டகளப்பு, பெந்தரை
195.யாழ்ப்பாண கொமாண்டரியை நிருவகித்த அதிகாரி யார்?
*கொமான்டர்
196.யாழ்ப்பாண கொமாண்டரிக்கு உட்பட்ட பிரதேசங்களை குறிப்பிடுக?
*புத்தளம் , யாழ்ப்பாணம்
198.இலங்கையின் ஒல்லாந்து ஆட்சியில் கொழும்பு ஆளுநரின் கீழ் செயற்பட்ட கொமாண்டரிகள் 02ஐ குறிப்பிடுக?
* யாழ்ப்பாண கொமாண்டரி
* காலி கொமாண்டரி
199.ஒல்லாந்து ஆட்சியில் கொழும்பு ஆளுநரின் கீழ் செயற்பட்ட கொமாண்டர்கள் இருவரைக் குறிப்பிடுக?
* யாழ்ப்பாண கொமாண்டர்
* காலி கொமாண்டர்
200.இலங்கையில் ஒல்லாந்து ஆளுநருக்கும் கொமாண்டரிகளுக்கும் கீழ்பட்ட நிர்வாக பிரிவுகளுக்கள் 03ஐ குறிப்பிடுக?
*திசாவை
*கோறளை
*முதலி
Post a Comment