51. ஒல்லாந்தருக்கு கண்டி இராச்சியத்தில் யானை தவிர்ந்த முழு வர்த்தக பொருட்களையும் விலை கொடுத்து வாங்க செய்த உடன்படிக்கை எது?
*1638 உடன்படிக்கை
52. மட்டக்களப்பு துறைமுகத்தை மிக கூடியளவு பயன்படுத்திய ஐரோப்பியர் யார்?
*ஒல்லாந்தர்
போர்த்துக்கேயரை வெளியேற்றலும் ஒல்லாந்தர் ஆதிக்கம் பரவலும்.
53. 2ம் இராஜசிங்கன் போர்த்துக்கேயரை விரட்ட எடுத்த காலம் யாது?
* 2௦ ஆண்டுகள்
54. ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடமிருந்து முதன் முதலாக கைப்பெற்றிய கோட்டை எது?
*மட்டக்களப்பு கோட்டை
55. கி.பி. 1638 ன் பின்னர் ஒல்லாந்து படையுடன் இனைந்து 2ம் இராஜசிங்கன் கைப்பெற்றிய கோட்டைகள் 07ஐ குறிப்பிடுக?
*திருகோணமலை
* காலி
* நீர் கொழும்பு
* களுத்துறை
* கொழும்பு
* மன்னார்
* யாழ்ப்பாணம்
56. 02ம் இராஜசிங்கனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையே கருத்து முரண்பாடு ஏற்பட காரணமான கோட்டைகள் யாவை?
* திருகோணமலை
* நீர்கொழும்பு
57. கி.பி. 1638 உடன்படிக்கையில் கையொப்பமிட்ட இரு தரப்பினர்கள்யாவர்?
* ஒல்லாந்தர் , கண்டி மன்னன்
58. 1638 உடன்படிக்கையில் ஒல்லாந்தரால் மறுக்கப்பட்ட வாசகம் யாது?
* மன்னன் விரும்பினால் மாத்திரம் ஒல்லாந்த படைகள் நிறுத்தி வைக்க படும்
59. 02ம் இராஜசிங்கனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையே கருத்து முரண்பாடு வளர்ச்சியுற்றமைக்கான பிரதான காரணங்கள் ஐ குறிப்பிடுக?
* கைபற்றிய கோட்டைகளை மன்னனிடம் வழங்காமை
* இரு சாரரிடமும் காணபட்ட முரண்பாடு
60. போர்த்துக்கேயரின் கோட்டைகளில் தங்கியிருக்கும் ஒல்லாந்து படை வீரர்களுக்கு சம்பளம் கொடுப்பது எனது கடமையல்ல எனக் கூறிய மன்னன் யார்?
* 02ம் இராஜசிங்கன்
61. போர்ச் செலவை திருப்பித் தரும் வரை கோட்டைகளை ஒப்படைக்க முடியாது எனக் கூறியவர்கள் யார்?
* ஒல்லாந்தர்
62. ஒல்லாந்தரின் பொருத்தமில்லாத நடவடிக்கைகளை கண்டு 02ம் இராஜசிங்கன் பொறுமையாக இருந்தமைக்கான காரணம் யாது?
* போர்த்துக்கேயரை நாட்டில் இருந்து முற்றாக வெளியேற்ற
63. கொழும்பு கோட்டையை போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றிய தளபதி யார்?
*ஜெராட் கல்பர்ட்
64. போர்த்துக்கேயரின் இறுதிக் காலத்தில் பெரும் கப்பல் படையுடன் இலங்கை வந்த ஒல்லாந்தர் யார்?
*ஜெராட் கல்பர்ட்
65. கொழும்பை தாக்குவதற்கு உயராமான இடங்களில் பீரங்கிகளை பொருத்திய தளபதி யார்?
*ஜெராட் கல்பர்ட்
66. 2ம் இராஜசிங்கன் ஒல்லாந்தருடன் முரண்பட்டாலும் போர்த்துக்கேயரை விரட்ட தேவையான படையுதவியை வழங்கிய மன்னன் யார்?
* 02ம் இராஜசிங்கன்
67. ஒல்லாந்தர் 1638 உடன்படிக்கையை மீறிய செயலாக கருதிய விடயம் எது?
* போர்த்துக்கேயரிடம் இருந்து கைபற்றிய கோட்டைகளை மன்னனுக்கு வழங்காமை
68. 1658 இல் போர்த்துக்கேயரிடமிருந்து இறுதியாக ஒல்லாந்தர் கைப்பற்றிய கோட்டை 02ஐ குறிப்பிடுக?
* மன்னார்
* யாழ்ப்பாணம்
69. 02ம் இராஜசிங்கன் ஒல்லாந்து ஆட்சிப் பிரதேசங்களைக் குறைப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கை யாது?
* போர்த்துக்கேயர் இடம் இருந்து கைபற்றிய பிரதேசங்களை கண்டி அரசுடன் இணைத்து கொண்டமை
70. 02ம் இராஜசிங்கனின் ஆட்சிப்பிரதேசங்களில் ஒல்லாந்தர் நிர்மானித்த கோட்டைகள் 10 ஐ குறிப்பிடுக?
* கொழும்பு
* மாத்தறை
* நீர் கொழும்பு
* கற்பிட்டி
* மன்னார்
* திருகோணமலை
* மட்டகளப்பு
*யாழ்ப்பாணம்
* ஆனையிறவு
* பருத்தித்துறை
* ஊர்காவல்துறை
71. “ இஞ்சியை கொடுத்து மிளகாய் வாங்கியது போல எனும்” உவமைத் தொடருடன் தொடர்புடைய மன்னன் யார்?
*02ம் இராஜசிங்கன்
ஒல்லாந்தர் கண்டி இராசதானியுடன் கொண்ட தொடர்பு
72. கண்டி இராசதானியுடன் தொடர்புடைய ஐரோப்பியர் 03 ரைக் குறிப்பிடுக?
*போர்த்துகேயர்
* ஒல்லாந்தர்
* பிரித்தானியர்
73. கண்டி இராசதானியுடன் மிக நீண்ட காலம் நல்லுறவுடன் செயற்பட்ட ஐரோப்பியர் யார்?
* ஒல்லாந்தர்
74. கண்டி இராசதானியுடன் ஆக்கிரமிப்பு கொள்கையை கடைப்பிடித்த ஐரோப்பியர் யார்?
* போர்த்துக்கேயர்
75. கரையோரப் பிரதேசங்களை கைப்பெற்றி 20 ஆண்டுகள் செல்ல முன்னர் கண்டியையும் கைப்பற்றி வெற்றி கொண்ட ஐரோப்பியர் யார்?
* பிரித்தானியர்
76. 1658 – 1796 வரை இலங்கையின் கரையோரப் பகுதியை ஆட்சி செய்த ஐரோப்பியர் யார்?
* ஒல்லாந்தர்
77. கண்டி இராசதானியுடன் ஒல்லாந்தர் கொண்ட தொடர்புகள் 03ஐ குறிப்பிடுக?
* கடித பரிமாற்றம்
* தூது பரிமாற்றம்
* ஆக்கிரமிப்பு
78. கண்டி இராசதானியுடன் நீண்ட கால தொடர்பும் இல்லாமல் யுத்தமும் இல்லாமல் 02ஐயும் கலர்ந்த ஓர் தொடர்பை வைத்திருந்த ஐரோப்பியர் யார்?
* ஒல்லாந்தர்
02ம் இராஜசிங்கனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையிலான தொடர்புகள்
79. 02ம் இராஜசிங்கனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்ட காலப்பகுதியை குறிப்பிடுக?
*1638 தொடக்கம் 1658
80. கண்டியின் வலிமை பற்றி கருத்தில் கொள்ளாது ஒல்லாந்து அதிகாரிகள் ஆட்சி செய்த காலத்தை குறிப்பிடுக?
* 1658 தொடக்கம் 1675
81. ஒல்லாந்து அதிகாரிகளினால் கண்டியை கைப்பெற்றும் நோக்கில் கிழக்கு மேற்கு கரைகளை கைப்பற்றிய காலம் யாது?
* 1659 தொடக்கம் 1668
82. 02ம் இராஜசிங்கனும் கண்டியும் பலமுடையது என்பதை மன்னன் காட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளை குறிப்பிடுக?
* எல்ல வழிகளிலும் தாக்குதல்
* திடீர் தாக்குதல்
83. 02ம் இராஜசிங்கன் கண்டியின் வலிமையை வெளிக் காட்ட மேற்கொண்ட நடவடிக்கையால் ஒல்லாந்தரின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களை குறிப்பிடுக?
* மரியாதையுடன் கூடிய பயத்துடன் காணப்படனர்
கண்டி இராசதானியுடனான தூதுத் தொடர்பு
84. இலங்கையுடன் ஒல்லாந்தர்கள் தொடர்பை ஆரம்பித்த முதல் மன்னன் யார்?
* முதலாம் விமல தர்ம சூரியன்
85. 2ம் இராஜசிங்க மன்னனை சந்தித்த ஒல்லாந்து தூது குழுக்களின் எண்ணிக்கை யாது?
* 8
86. கி.பி. 1656 இல் 2ம் இராஜசிங்கனை சந்தித்த ஒல்லாந்து தூதுவன் யார்?
* ஜெனரல் ஜெராட் கல்பட்
87. 2ம் இராஜசிங்க மன்னனை சந்தித்த தூதுக்குழுக்களில் மிகவும் முக்கியமானது எது?
* ஜெனரல் ஜெராட் கல்பட் தூதுக்குழு
88. 02ம் இராஜசிங்கனால் மிகவும் மரியாதையுடன் அலங்கார ஊர்வலத்துடன் வரவழைக்கப்பட்ட தூதுவன் யார்?
* ஜெனரல் ஜெராட் கல்பட்
89. ஒல்லாந்து தூதுக்குழுக்கள் சந்தித்த மன்னர்கள் 04ஐ குறிப்பிடுக?
*முதலாம் விமல தர்ம சூரியன்
* இரண்டாம் ராஜ சிங்கன்
* இரண்டாம் விமல தர்ம சூரியன்
*ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன்
* விஜய ராஜ சிங்கன்
90. 02ம் இராஜசிங்க மன்னனுக்கு பிறகு இடம் பெற்ற ஒல்லாந்து தூதுக்குழு தொடர்புகள் முறிவடைந்தமைக்கான பிராதன காரணம் எது?
* ஒல்லாந்தருக்கும் மன்னனுக்கும் இருந்த கருத்து முரண்பாடு
91. 2ம் இராஜசிங்கனின் மரனத்தின் பின்னர் ஒல்லந்து தூது பயனங்களில் முன்வைக்கப்பட்ட கோரிக்ககைகள் அடங்கிய கடிதத்தினை மன்னனுக்கு வழங்கிய முகவர்கள் யார்?
* தூதுவர்கள் ( ஆளுனர்கள்)
92. கண்டி மன்னனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் நடைபெற்ற தூது பயனங்களில் முக்கியத்துவம் வழங்கப்பட்ட விடங்கள் 04ஐ குறிப்பிடுக?
* பரிசுகளை பரிமாறி கொள்ளல்
*நல்லுறவை வெளிபடுத்துதல்
* தூ துவரிகளின் கோரிக்கைக்கு மறு பகுதியினர் செவிமேடுத்தல்
* இரு சாராரிடம் எற்படும் சிக்கல்கள் பற்றி கலந்துரையடல்
93. 2ம் இராஜசிங்கன் தான் இலங்கைப் பேரரசன் என்பதை எவ் வினத்தவருக்கு வெளிக்காட்டினான்?
* ஒல்லாந்தருக்கு
94. திரிசிங்களாதீஸ்வரன் என ஒல்லாந்தரின் கடிதத்தில் கூறப்பட்ட மன்னன் யார்?
* 2ம் இராஜசிங்கன்
95. “எனக்கு பணிபுரியும் அன்பான ஒல்லாந்து இனத்தவர்” எனும் வாசகத்தை தனது கடிதத்தில் எழுதிய மன்னன் யார்?
*2ம் இராஜசிங்கன்
96. “தங்களது பணிவுள்ள சேவகன ;” எனும் வசனத்தை கொண்டு 2ம் இராஜசிங்கனுக்கு கடிதம் எழுதிய ஐரோப்பியர் யார்?
* ஒல்லாந்தர்
இலங்கையில் ஒல்லாந்து தூதுவர்கள் சந்தித்த கண்டி மன்னர்கள் தொடர்பாக பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்குக.
97. கி.பி. 1602 ஜூலை மாதம் 1ம் விமலதர்ம சூரியனை சந்தித்த தளபதி யார்?
* ஜோரிஸ் வான் ஸ்பில் பெர்ஜன்
98. கி.பி. 1656 இல் 2ம் இராஜசிங்க மன்னனை சந்தித்த ஒலல்hந்த தூதுவன் யார்?
* ஜெனரல் ஜெராட் கல்பர்ட்
99. கி.பி. 1688 இல் 2ம் விமலதர்மசூரியனை சந்தித்த தூதுவர் யார்?
* கலன் அல்பஸ்
100.கி.பி. 1721 இல் ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கனை சந்தித்த தூதுவர் யார்?
*கோர்னேலியஸ் டெகல்
Post a Comment