இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி ௦2

51. 1798 இல் இலங்கையின் கரையோரப் பகுதிக்கு நியமிக்கப்பட்ட ஆளுனர் யார்? 

52. இரட்டை ஆட்சிக்காலத்தில் நிர்வாகம் மேற்கொண்ட அதிகாரிகளின் வகைகள் இருவரை குறிப்பிடுக? 

53. இரட்டை ஆட்சி முறை பலவீனம் அடைந்தமைக்கான பிரதான காரணத்தை குறிப்பிடுக?

54. இரட்டை ஆட்சி தோல்வியடைந்தமைக்கான காரணத்தை குறிப்பிடுக?

 கரையோர பிரதேசங்கள் முடிக்குரிய குடியேற்ற நாடாதல். 

55. முடிக்குரிய ஆட்சி என்றால் என்ன? 

56. இலங்கை பிரித்தானிய குடியேற்ற நாடாக்கப்பட்ட ஆண்டைக் குறிப்பிடுக? 

57. முடிக்குரிய ஆட்சிக் காலத்தில் இலங்கை பிரித்தானிய அரசின் தலைவர் யார்? 

பிரித்தானியர் கண்டி அராச்சியதை கைப்பற்றல். 

58. கண்டி இராச்சியத்தை பிரித்தானியர் கைப்பற்ற மேற்கொண்ட முயற்சிகள் 02ஐ குறிப்பிடுக? 

59. ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் காலத்தில் ஆங்கிலேயரால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புக்கள் 02ஐ குறிப்பிடுக? 

1803 கண்டி ஆக்கிரமிப்பு 

60. 1803 இல் கண்டி மீது படையெடுப்பு மேற்கொண்ட ஆங்கில ஆளுநர் யார்? 

61. ஆளுநர் பிரட்ரிக் நோர்த்தின் ஆட்சிக் காலத்தை குறிப்பிடுக? 

62. 1803 ஆம் ஆண்டு பிரட்ரிக் நோர்த் கண்டி மீது படையெடுத்தமைக்கான காரணங்கள் ஃ கைப்பற்றுவதற்கான காரணங்கள் 05ஐ குறிப்பிடுக?

63. இராஜாதி இராஜசிங்க மன்னன் மரணமடைந்த ஆண்டைக் குறிப்பிடுக? 

64. இராஜாதி இராஜசிங்க மன்னனின் மரணத்தின் பின்னர் கண்டிக்கு அரசுரிமை பெற இருந்த நாயக்க இளவரசர்கள் 02ஐ குறிப்பிடுக? 

65. ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னனின் இயற் பெயர் யாது? 

66. அச்சத்தின் காரணமாக ஆங்கிலேயரிடம் தஞ்சமடைந்த கண்டியின் நாயக்க இளவரசன் யார்? 

67. கண்டியின் ஆட்சியுரிமையை தமதாக்கிக் கொள்ளும் பின்னியில் பிரித்தானியரால் அடைக்கலம் வழங்கப்பட்ட கண்டி இளவரசன் யார்? 

68. ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னனுடன் சாதகமான உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ள 1800 ஆம் ஆண்டு சென்ற ஆங்கிய தளபதி யார்? 

69. ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னனிடம் சாதகமான உடன்படிக்கை ஒன்றை செய்து வர 1800 ஆம் ஆண்டு தளபதி ஒருவரை அனுப்பிய பிரித்தானிய ஆளுநர் யார்? 

70. 1803 இல் கண்டியை ஆக்கிரமிக்க சென்ற இரு அணிகளும் புறப்பட்ட இடங்களை குறிப்பிடுக? 

71. தளபதி மெக்டோவலின் படை புறப்பட ஆயத்தமான இடம் எது? 

72. பிரட்ரிக் நோர்த்தின் படை கண்டி நகரத்தினுல் நுழைந்த ஆண்டைக் குறிப்பிடுக? 

73. பிரட்ரிக் நோர்த் ஆளுநரால் 1803 இல் மன்னனாக்கப்பட்ட நாயக்க இளவரசன் யார்? 

74. 1803 பிரித்தானிய ஆக்கிரமிப்பால் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்க மன்னன் பாதுகாப்பாக தலைமறைவாக இருந்த இடம் எது? 

75. 1803 இல் மன்னனாக்கப்பட்ட பொதும் கண்டி மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத நாயக்க மன்னன் யார்?

76. 1803 ஆம் ஆண்டு கண்டி ஆக்கிரமிப்பில் பிரித்தானியர் தோல்வியடைந்தமைக்கான காரணங்கள் 04ஐ குறிப்பிடுக? 

77. 1803 படையெடுப்பின் ஆங்கிலேயரால் நியதிக்கப்பட்ட முத்துசாமியை தன்னிடம் ஒப்படைக்கும் படி கட்டளையிட்ட மன்னன் யார்? 

78. கண்டி இளவரசன் முத்துசாமியை ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னனிடம் ஒப்படைத்த ஆங்கில தளபதி யார்? 

79. 1803 கண்டி மீது பிரித்தானியர் மேற் கொண்ட படையெடப்பை வெற்றி கொள்ள மன்னன் மேற்கொண்ட நடவடிக்கைகள் 04ஐ குறிப்பிடுக? 




தோமஸ் மெயிட்லண்ட் 

80. தோமஸ் மெயிட்லனின் ஆட்சிக் காலத்தை குறிப்பிடுக? 

81. கண்டி இராச்சியத்தை வெற்றி கொள்ள வேண்டுமானால் மன்னன் மற்றும் மக்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள வேண்டும் என அறிந்து கொண்ட பிரித்தானிய ஆளுநர் யார்? 

82. 1805 இல் கண்டி இராச்சியத்துடன் தந்திரமான உறவு உறவை மேற்கொண்ட ஆளுநர் யார்?

83. இலங்கையில் பிரட்ரிக் நோர்த்தை விட தந்திரமான முறையில் செயற்பட்ட ஆளுநர் யார்? 

84. கண்டி இராச்சியத்தில் காணப்பட்ட முரண்பாடுகளை வளரச் செய்து கண்டி இராச்சியம் பற்றிய தகவல்களை பெரும் திட்டமொன்றை வடிவமைத்த மன்னன் யார்? 

85. கண்டி இராச்சியத்தில் தோமஸ் மெயிட்லண்டின் தந்திர செயற்பாடுகளை நடைமுறைப்படுத்திய நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் யார்? 

86. பின்வரும் ஆளுநர்களின் ஆட்சிக் காலத்தை குறிப்பிடுக? 

 ஆளுனர் பிரட்ரிக் நோர்த் 

 தோமஸ் மெயிட்லண்ட் 

 றொபட் பிரவுண்ரிங் 

87. ஜோன் டொயிலி பிறந்த ஆண்டைக் குறிப்பிடுக? 

88. ஜோன் டொயிலின் தாய் நாடு எது? 

89. கண்டி இராசதானியின் தகவல்களை அறிந்து கொள்ள ஜோன் டொயிலி தொடர்பு கொண்ட பிரதானிகள் 04ஐ குறிப்பிடுக? 

90. ஜோன் டொயிலி கண்டி இராசதானியின் தகவல்களை பெற்றுக் கொள்ள மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை?

91. ஜோன் பைபஸ் எனும் ஆங்கில தூதுவன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னனை சந்திக்கும் நிகழ்வை காட்சிப் படுத்துக?

92. ஆளுநர் தோமஸ் மெயிட்லனின் படத்தை காட்சிப்படுத்துக?

கண்டி இராச்சியத்துடன் காணப்பட்ட அதிகாரப் போட்டி 

93. ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனுக்கும் கண்டி பிரதானிகளுக்குமிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டமைக்கான காரணங்கள் 05ஐ குறிப்பிடுக? 

94. மகா அதிகாரம் பிலிமத்தலாவைக்கு மரண தண்டனை வழங்கிய ஆளுநர் யார்? 

95. கண்டி இராச்சியத்திற்கு உட்பட்ட சப்ரகமுவ திசாவையை 02 ஆக பிரித்து கண்டி பிரதானிகளுக்குள் முரண்பாட்டை ஏற்படுத்திய மன்னன் யார்? 

96. மகா அதிகாரம் பிலிமத்தலாவைக்கு பின்னர் கண்டியின் முதலமைச்சர் பதவிக்கு ( மகா அதிகாரம்) நியமிக்கப்பட்ட பிரதானி யார்? 

97. ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னன் 02வது பிரதம பிரதானியாக நியமிக்கப்பட்டவரையும் அவரின் எதிரையும் குறிப்பிடுக? 

 02ம் பிரதம பிரதானி                                         எதிரி

98. ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனுக்கும் பௌத்த குருமார்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டமைக்கான காரணங்களை குறிப்பிடுக? 

99. ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னனால் இராசதுரோக செயற்பாட்டின் பெயரில் மரணத தண்டனை விதிக்கப்பட்ட இளம் பிக்கு யார்? 




100.ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனுக்கும் கண்டி பிரதானிகளுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டமைக்கான காரணங்களை குறிப்பிடுக? 

Post a Comment