01. இலங்கையின் மிகப் பழமையான நூலாக கருதப்படும் பாளிமொழி இலக்கிய நூல்.
1) தீபவம்சம்
2) மகாவம்சம்
3) போதிவம்சம்
4) சமந்தபாஷாதிகால
02. இலங்கையில் பயன்படுத்தப்படும் தங்க நாணயமாக விளங்குவது.
1) தம்பமஸ்ஸ
2) புராணதரண
3) கஹவனு
4) கஹபன
03. பின்வரும் விடயங்களில் நிரல் 1 ன் கீழ் தேசசஞ்சாரிகளும் நிரல் 2 ல் அவர்களது நாடுகளும் தரப்பட்டுள்ளன. அவற்றை சரியாக ஒழுங்குபடுத்தும் போது அமையும் விடைத்தொகுதி.
நிரல் 1 நிரல் 2
1. பாஹியன் தேரர் A. போர்த்துக்கல்
2. ஜோவாவோ ரிபைரோ B. இங்கிலாந்து
3. பிலிப்பஸ் பெல்தெவுஸ் C. சீனா
4. றொபேட் நொக்ஸ் D. ஒல்லாந்து
1) ABCD
2) CADB
3) DCBA
4) CBDA
04. பனாகடுவ செப்பேட்டினை பொறிப்பித்த மன்னன்.
1) வசபன்
2) 1ம் பராக்கிரமபாகு
3) நிஸங்கமல்லன்
4) 1ம் விஜயபாகு
05. இலங்கையின் வரலாற்றினைத் தொடர்ச்சியாகத் தருகின்ற வரலாற்று நூலான மகாவம்சத்தினை எழுதிய மகாநாமதேரர் வசித்த பிரிவேனா பின்வருவனவற்றுள் எது?
1)திக்சந்தசெனவியாபிரிவேனா
2)பெப்பிலியானேபிரிவேனா
3)சுனேத்திராதேவிபிரிவேனா
4)காரகலபத்மாவதிபிரிவேனா
06. இலங்கையின் வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு சான்றாக விளங்குகின்ற போல்டியசின் இலங்கை வரலாறு என்ற நூலை எழுதியவர்.
1) ரிபைரோ
2) பாகியன்தேரர்
3) பிலிப்ஸ் பல்டியஸ்
4) ரொபட்ரொக்ஸ்
07. நாடு ஒன்றின் பொருளாதார நிலை, வர்த்தகம், உலோகப் பாவனை போன்றவற்றினை அறிந்து கொள்வதற்கு உதவுகின்ற முக்கியமான மூலாதாரம்.
1) ஓலைச்சுவடிகள்
2) கல்வெட்டுக்கள்
3) நாணயங்கள்
4) செப்பேடுகள்
08. கி.பி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் இசுறுமுனிய விகாரையில் செதுக்கப்பட்டுள்ள குதிரைத் தலையும் மனிதனும் என்ற செதுக்கலில் குதிரைத்தலை, மனித்தலை என்பன குறிக்கும் விடயங்கள் முறையே,
1) அக்கினித் தெய்வம், பர்ஜன் என்னும் தெய்வம்
2) பர்ஜன் என்னும் தெய்வம், அக்கினித் தெய்வம்
3) அக்கினித் தெய்வம், கல்வித் தெய்வம்
4) அக்கினித் தெய்வம், இந்திரத் தெய்வம்
09. கி.பி 4ஆம் நூற்றாண்டளவில் இலங்கை வரலாறு தொடர்பாக எழுதப்பட்ட இலக்கிய மூலாதாரம்.
1) தீபவம்சம்
2) மகாவம்சம்
3) சூளவம்சம்
4) போதிவம்சம ;
10. மகாவம்சத்தின் உரை நூலான டீகாவ என்பதற்கு வழங்கப்படுகின்ற பெயர்.
1) சமந்தாபாஷா தீகாவ
2) நிகாய சங்கிராய
3) பரகும்பா சரித
4) வம்சத்தப்பகாசினி
11. இலங்கை தொடர்பான வரலாற்றுத் தகவல்களைத் தனது தேச சஞ்சார அறிக்கையில் குறிப்பிட்ட அரபு நாட்டவர்.
1) பாகியான் '
2) மெகஸ்தனில்
3) இபன்பதூதா
4) சியுங்சாங்
12. நிசங்கமல்ல மன்னனால் பொறிக்கப்பட்ட இலங்கையின் மிக நீளமான கல்வெட்டு.
1) மிகிந்தலை கல்வெட்டு
2) கல்பொத்த கல்வெட்டு
3) கடலாதெனிய கல்வெட்டு
4) தோணிக்கல கல்வெட்டு
13. வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவர்.
1) அரிஸ்ரோட்டில்
2) ஈ.எச.கார்
3) ஹெரடோரஸ்
4) மாக்சியவல்லி
14. இலங்கையின் உள் நாட்டு இலக்கிய மூலாதாரங்களில் மிகவும் பழைமையான நூல்.
1) மகாவம்சம்
2) தாது வம்சம்
3) தீபவம்சம்
4) போதிவம்சம்
15. கிரேக்கர்கள் இலங்கைக்கு சூட்டிய பெயர்.
1) தப்ரபேன்
2) சீலன்
3) இரத்தின துவீபம்
4) செரண்டிப்
16. இலங்கையின் வரலாற்றைக் கூறும் வெளிநாட்டு நூல்
1) இராஜதரங்கினி
2) தீபவம்சம்
3)இரகுவம்சம்
4) போதிவம்சம்
17. வசபனின் ஆட்சி அதிகாரம் வட பகுதியில் பரவடைந்திருந்தமை பற்றிக் கூறும் வரலாற்று ஆவணம்.
1) வல்லிபுரம் பொற்சாசனம்
2) குசேலன் கல்வெட்டு
3) கித்துல்பவ்வ கல்வெட்டு
4) கொடவாய கல்வெட்டு
18. பின்வரும் நிரல்களைத் தொடர்புபடுத்தும் போது சரியான விடைத் தொகுதியாக அமைவது.
நிரல் A நிரல் B
1. சீன இலக்கியம் A. இயன்பதூதாவின் தேச சஞ்சார அறிக்கை
2. அரபு இலக்கியம் B. ரொபேட் றொக்ஸ் அவர்களின் நூல்
3. ஆங்கில இலக்கியம் C. பாகியன் தேரரின் தேசசஞ்சார அறிக்கை
1) ABC
2) CAB
3) CBA
4) ACB
19. எமது நாட்டில் கிடைக்கப் பெற்ற புராதன நாணயம்.
1) கஹபண
2) அக எனும் பொன் நாணயம்
3) கம்பமஸ்ஸ
4) இலஷ்மியின் உருவம் பதித்த நாணயம்
20. இலங்கைக்கு வருகை தராது இலங்கை பற்றி எழுதிய எழுத்தாளர்.
1) பாகியன் தேரர்
2) இபன்பதூதா
3) ரொபட்றொக்ஸ்
4) பிளினி
21. கம்பளை தொடக்கம் கோட்டை வரையிலான காலப் பகதியின் வரலாற்றைக் கற்க உதவும் நூல்.
1) போதிவம்சம்
2) பூஜா வலிய
3) ராஜாவலிய
4) மயூரசந்தேசய
22. “கல்பொத்த கல்வெட்டு” எந்த மன்னன் காலத்திற்குரியது.
1) 1ம் பராக்கிரமபாகு
2) 1ம் விஜயபாகு
3) நிஸங்கமன்னன்
4) வசபன்
23. பின்வரும் நிரல்களை தொடர்புபடுத்தும் போது சரியான விடைத்தொகுதியாக அமைவது.
நிரல் A நிரல் B
1. தூதுகாவியம் A. சீதாவாக்க சட்டன
2. புகழ் காவியம் B. மயூரசந்தேசய
3. போர்க்காவியம் C. பெரகும்பா சிரித்த
1) BCA
2) CAB
3) BAC
4) CBA
24. முதலாம் விஜயபாகு மன்னனின் பனாகடுவ செப்பு சாசனத்தில் அநுராதபுரத்திற்கு வழங்கப்பட்ட பெயர்.
1) நுருபுரம்
2) புரம்
3) பரிகித்தகம்
4) அபரிகித்தகம
25. குகைக் கல்வெட்டாக அமைவது.
1) சித்துல்பவ்வ
2) தோணிகல
3) கடலாதெனிய
4) கட்டுகஹகல்கே
26. இலங்கைக்கு வருகை தந்து இலங்கையைப் பற்றி எழுதியவர்.
1) தொலமி
2) அரிஸ்ரோட்டில்
3) பாஹியன்தேரர்
4) ஹியுங்சாங்
27. இலங்கையின் சிதைவுகளில் முக்கியம் பெறுவதாக அமைவது.
1) சிகிரியா
2) நாணயங்கள்
3) களி மண் தட்டுக்கள்
4) கல்வெட்டு
28. பொலநறுவை கால நாணயமாக அமைவது.
1) கஹபண
2) தரண
3) புராண
4) தம்பமஸ்ஸ
29. குதிரைத் தலையும் மனிதனும் செதுக்கல் உள்ள விகாரை.
1) இசுறு முனிய
2) கல்விகாரை
3) தம்புள்ள விகாரை
4) கடலாதெனிய
30. செப்பனிடப்பட்ட கற்பலகையில் எழுதப்பட்டது.
1) தூண்கல்வெட்டு
2) குன்றுக்கல்வெட்டு
3) குகை கல்வெட்டு
4) சுவர்க் கல்வெட்டு
31. வசப மன்னனினது வல்லிபுரம் சாசனம் ஆக்கப்பட்டது.
1) களிமண் தட்டு
2) பொற்தகடு
3) செப்புத்தகடு
4) மரப்பலகை
32. இலங்கையின் புராதன கல்வெட்டுக்கள் எழுதப்பட்ட மொழி.
1) பாளிமொழி
2) சிங்கள மொழி
3) பிராமி மொழி
4) ஆங்கில மொழி
33. இலக்கிய மூலாதாரங்களின் படி இலங்கையை ஒன்றுபடுத்தி ஆண்ட முதல் மன்னன்.
1) தேவநம்பியதீசன்
2) பாதிகாபயன்
3) வேலுசுமண
4) துட்டகைமுனு
34. தீப வம்சத்தின் குறைபாடுகளை நீக்குவதற்காக உருவாக்கப்பட்ட நூல்.
1) மகாவம்சம்
2) சூளவம்சம்
3) டீகாவ
4) சமந்தபாஷாதிகாவ
35. இலங்கைக்கு வருகை தராது கேட்டறிந்தவற்றைக் கொண்டு இலங்கை வரலாறு பற்றி குறிப்பிட்டோர் அடங்கிய விடை.
1) பாகியன், இபன்தூதா, ரிபைரோ
2) அரிஸ்ரோட்டில், ரிபைரோ, ப்ளினி
3) அரிஸ்ரோட்டில், மெகஸ்தனிஸ், ஹியுங்சாங்
4) ரிபைரோ, ஹியுங்சாங், பாகியன்
36. புராதன இலங்கையில் பயன்படுத்தப்பட்ட பொன் நாணயம்.
1) தம்பமஸ்ஸ
2) அக
3) கஹபண
4) கஸ்எபு
37. நிரல் A நிரல் B
1. இயற்கை வரலாறு A. ரிபைரோ
2. இராஜதரங்கனி B. றொபேட் நொக்ஸ்
3. இலங்கை வரலாற்று துன்பியல் C. கல்கணர்
4. இலங்கையுடனான வரலாற்றுத் தொடர்பு D. ப்ளினி
1) ABCD
2) DCBA
3) DCAB
4) DBCA
38. நிரல் யு நிரல் டீ
1. தப்ரபேன் A. பிரித்தானியர்
2. செயிலான் B. இந்தியர்
3. சிலோன் C. கிரேக்கர்
4. சீஹலதீப D . போர்த்துக்கேயர்
1) ABCD
2) CDAB
3) CDBA
4) DCBA
39. இரசனை மிக்க புராதன கால கவிதைகள் அதிகமாகக் காணப்படும் இடம்.
1) அபயகிரி விகாரை
2) சிகிரியா பளிங்குச் சுவர்
3) தம்புள்ள விகாரை
4) தலதா மாளிகை
40. தம்பதெனிய இராச்சியத்தை தலைநகராக்கிய மன்னன்.
1) 3ம் விஜயபாகு
2) 2ம் பராக்கிரமபாகு
3) 1ம் விஜயபாகு
4) 2ம் விஜயபாகு
41. கி.பி நான்காம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டமை, தகவல்கள் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை, இந்நாட்டின் பழமையான வம்சக் கதையாக அமைந்துள்ளமை போன்ற விடயங்கள் எந்த மூலாதாரத்துடன் தொடர்புடையவை?
1) மகாவம்சம்
2) தீபசம்சம்
3) தாதாவம்சம்
4) போதிவம்சம்
42. இந்நாட்டின் பௌத்த சாசன வரலாற்றிற்கு முதலிடம் வழங்கி எழுதப்பட்டுள்ள நூல் எது.
1) ராஜாவலிய
2) ராஜரத்னாகரய
3) நிக்காய சங்கிரக
4) வினயட்டகத்தாவ
43. பெறுமதி வாய்ந்த வரலாற்று மூலாதாரமாகக் கருதப்படும் கல்வெட்டுக்கள் தொடர்பில் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க.
1) கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் சம்பவங்களுக்கு சமகாலத்தவையாகும்.
2) வம்சக் கதைகளில் காணப்படும் தகவல்களை உறுதிப்படுத்துவதற்கு உதவுபவையாகும்.
3) தொடர்ச்சியான அரசியல் வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்குப் பயன்படுத்தலாம்.
4) சிங்கள எழுத்துக்களின் பரிணாமத்தை அறிந்து கொள்ளப் பயன்படும்.
45. மகாவம்சத்தின் தொடர்பான சரியான கூற்று.
1) கி.பி. 5ம் நூற்றாண்டிற்கு முன் எழுதப்பட்ட நூல்.
2) லௌகீக விடயங்களிலும் பார்க்க சமய வரலாற்றைக் கூறுகிறது.
3) மகாவிகாரை பிக்குவான குப்பிகலதிஸதேரரால் எழுதப்பட்டது
4) வெளிநாட்டு இலக்கிய மூலாதார நூல்
47. யு பிரிவில் கல்வெட்டுக்களும் டீ பிரிவில் அதில் கூறப்பட்ட விடயங்களும் தரப்பட்டுள்ளது. அதனைத்
தொடர்புபடுத்தும் போது கிடைக்கும் சரியான விடைத்தொகுதி.
யு டீ
1. வல்லிபுரம் பொற்சாசனம் யு. ஐந்து அமைச்சர் பரம்பரை பற்றியது
2. கந்தலு வெவக் கல்வெட்டு டீ. வர்த்தக சந்தை ஒன்றின் நிருவாகம் பற்றியது
3. கொடவாய தூண் கல்வெட்டு ஊ. வசப மன்னனின் ஆட்சி அதிகாரம் வடபகுதியிலும்பரவலடைந்தமை.
4. பதுளை தூண் கல்வெட்டு னு. துறைமுக வரி அறவிடப்பட்டவை
1) யுஊனுடீ
2) டீயுனுஊ
3) ஊயுனுடீ
4) ஊடீனுயு
48. மகாவம்சத்தின் பாளி மொழி நூலுக்கு விளக்கமளிக்கு வகையில் எழுதப்பட்ட நூல்.
1) நிகாயசங்கிரஹய
2) வம்சத்தப்பகாசினி
3) பூஜாவலிய
4) சத்தர்மாலங்கார
49. A – அரிஸ்ரோட்டிலின் டிமுண்டோ B– மெகஸ்தனிஸின் இண்டிகா C –ஒனிசி கிரிட்டசின் அறிக்கை மேற்படி இலக்கிய மூலாதாரங்களுக்குரிய நாடு.
1) போர்த்துக்கல்
2) சீனா
3) கிரேக்கம்
4) உரோம்
50. பண்டைய இலங்கைப் பெண்களின் ஆடை, ஆபரணங்கள், கூந்தல் அலங்காரம், அவர்களின் அலங்கார கலைநுட்பங்கள் பற்றிய விபரனமான தகவல்களை அறிந்து கொள்ள ஆதாரமானவை,
1) தம்புள்ள ஓவியங்கள்
2) கல்விகாரை புத்தர்சிலை
3) சிகிரியா ஓவியங்கள்
4) இசுறுமுனிய காதலர் சிற்பம்
Post a Comment