இலங்கையின் வரலாற்று மூலாதாரங்கள் ௦3
51. பௌத்த சமய நூல்களைத் தேடி சீனாவில் இருந்து இந்தியாவிற்குக் கால்நடையாக வருகை தந்தவர்.
1) ரிபைரோ
2) ஹியுங்சாங்
3) இபன்பதூதா
4) பாகியன் தேரர்
52. இலங்கையின் கலாசார வளர்ச்சியின் வரலாற்றைக் காட்டும் உயிரோட்டமான சாட்சியமாக விளங்குவது.
1) நாணயங்கள்
2) சிதைவுகள்
3) கல்வெட்டுக்கள்
4) சித்திரங்கள்
53. “டீகாவ” எனும் விளக்கமளிக்கும் உரை நூலாக (மகாவம்சத்திற்கு எழுதப்பட்ட உரைநூலாக) அமைவது.
1) சீதாவாக்கசட்டன
2) பெரகும்சிரித்த
3) வம்சத்தப்பகாசினி
4) தாதுவம்சம்
54. இலங்கையின் இராசரட்டைக் கால வரலாற்றை அறிய உதவும் நூல் அல்லாதது.
1) போதிவம்சம்
2) தூப வம்சம்
3) ராஜாவலி
4) பூஜாவலிய
55. இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள பழைய துறைமுகமாக காணப்படும் மையம்.
1) மகன
2) ஜம்புகோளப்பட்டினம்
3) பல்லவங்க
4) உதிநகரம்
56. பௌத்த துறவிகள் பெற்றுக்கொண்ட வாழ்டங்கள் தொடர்பாகப் பொதுவாக அறியப்படக் கூடிய விடயங்களை உள்ளடக்கிய கல்வெட்டுக்கள்.
1) குகைகல்வெட்டு
2) பாறைகல்வெட்டு
3) தூண்கல்வெட்டு
4) சுவர்க் கல்வெட்டு
57. பெலன்னறுவைக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட செப்பு நாணயம்.
1) கஹபண
2) தம்பமஸ்ஸ
3) புராண
4) தரண
பின்வரும் இலக்கியங்கள் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு 86, 87, மற்றும் 88 ஆம் வினாவிற்கு விடை தருக.
யA –செலலிகினி சந்தேசய B – சத்தர்மாலங்கார
C –நிகாயசங்கிரஹய D – கொன்ஸ் தந்தினுசட்டன
58. போர்க் காவியமாக அமைவது.
1) A 2) B 3) C 4) D
59. பௌத்தசாசன வளர்ச்சி பற்றி எழுதப்பட்ட நூல்.
1) A 2) B 3) C 4) D
60. தூது காவியம் என அழைக்கப்படுவது.
1) A 2) B 3) C 4) D
61. கி.பி 7ம் - 8ம் நூற்றாண்டுகளுக்குரியதாகக் கருதப்படும் குதிரைத் தலையும் மனிதவுருவும் உடைய செதுக்கல் தொடர்பான தவறான கூற்று.
1) இசுறுமுனிய விகாரையில் செதுக்கப்பட்டுள்ளது.
2) அநுராதபுரத்தில் அமைந்துள்ளது.
3) குதிரைத்தலை அக்கினித் தெய்வத்தைக் குறிக்கும்
4) மனித உருவம் மன்னனைக் குறிக்கின்றது.
62. முதலாம் விஜயபாகு மன்னன் தனக்கு உதவி செய்த சித்தாறும்பி புத்த நாயக என்னும் அதிகாரிக்கு நன்றிக் கடனாக வழங்கிய பரிசுகள், சலுகைகள் பற்றிக் குறிப்பிடும் சாசனம்.
1) வல்லிபுர பொற்சாசனம்
2) பனாகடுவ செப்பு சாசனம்
3) ஆலம்புரி பொற்சாசனம்
4) மிகிந்தலைக் குகைக்கல்வெட்டு
63. புராதன காலத்தில் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட கஹவனு போன்ற தங்க நாணங்கள் மூலம நாம் அறிந்து கொள்ளக் கூடிய விடயங்கள் யாதெனில், நாட்டின்,
1) உள்நாட்டு, சர்வதேச வர்த்தக வளர்ச்சி
2) அரசர்களின் செல்வச் செழிப்பு, நாணய அதிகாரி
3) புராதன கால பொருளாதார முறை, தொழில்நுட்ப அறிவு
4) தொழில் நுட்ப அறிவு, நாணய அதிகாரி
64. கீழே தரப்பட்டுள்ள நபர்களில் கிரேக்க நாட்டிற்குரிய அறிஞர்களைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க.
A.பிளினி B. ஒனெசி C. பாகியன்
D. மெகஸ்தனிஸ் E. அரிஸ்ரோட்டில் F. ஹியுங்சாங்
1) ABCD 2) ABDA 3) EBFA 4) CDAF
65. இலங்கையின் அரசியல் தகவல்கள் அடங்கிய நூல்
1) பூஜாவலிய 2) இங்கிரிசிசட்டன 3) ராஜாவலிய 4) தூபவம்சம்
66. கோட்டை இராசதானி முதல் கண்டி இராசதானி வரையிலான காலப்பகுதி பற்றிய வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு உதவும் புகழ்காவியம்.
1) பெரகும்பா சிரித்த
2) செலிகினி சந்தேசய
3) மயூர சந்தேசய
4) இங்கிரி சட்டன
67. இரண்டாம் இராஜசிங்கன் சிறைக் கiதியாக இருந்து பின் இங்கிலாந்திற்கு தப்பிச் சென்று இலங்கை பற்றி குறிப்பிட்ட வெளிநாட்டவர்.
1) ஜோவாரோ நிபைரோ
2) பிலிப்பஸ் பொல்தெவுஸ்
3) இபின் பதுதா
4) ரொபட் நொக்ஸ்
68. இலங்கைக்கு வருகை தந்து அபயகிரி விகாரையில் சமயக்கல்வி கற்று இலங்கை பற்றிக் குறிப்பிட்ட வெளிநாட்டவன்.
1) நியுங்சாவ்
2) கிரோகிற்றோ
3) பாகியன்
4) சுன் - யாத் - சென்
69. மரப்பலகை சாசனங்களுக்கு உதாரணமாக அமைவது.
1) கடலாதெனிய விகாரை
2) அம்பக்கை தேவாலயம்
3) பனாகடுவ செப்பேடு
4) சீகிரி கிறுக்கல் கவிதை
70. வரலாற்றினை நாம் தெளிவாகவும் உண்மையான விடயங்களையும் தெரிந்து கொள்ள கல்வெட்டு மூலாதாரங்களானது மிகவும் பயனள்ளதாகும் எனக் கூறப்படுவதற்கான காரணம்.
1) கல்வெட்டுக்கள் மிகவும் பழமை வாய்ந்த மூலாதாரங்களில் ஒன்றாக இருப்பதனால்,
2) கல்வெட்டுக்களில் கூறப்படும் தகவல்கள் என்றும் ஆதார பூர்வமாய் அழியாமல் இருப்பதால்
3) தொல்பொருள் மூலாதாரங்களில் மிகவும் பெரிய மூலாதாரமாக கல்வெட்டுக்கள் இருப்பதால்
4) கார்பன் 14 என்ற விஞ்ஞான ஆய்வின் ஓடாக மதிப்பிடும் பொழுது பெறுமதி வாய்ந்ததாக இருப்பதனால்.
71. இலங்கையின் முக்கிய நூலான மகாவம்சம் பற்றிய பொய்யான கூற்று பின்வருவனவற்றுள் யாது?
1) மகா நாம தேரரினால் எழுதப்பட்ட காவியமாகும்.
2) வம்சத்தபஹாசினி என்ற நூலின் விளக்க உரை நூலாகும்.
3) 13ம் நூற்றாண்டு கால ஆட்சி அரச வரலாற்றைத் தொகுத்து கூறுகின்றது
4) இந்நூலில் அடங்கியுள்ள செய்திகள் கல்வெட்டுக்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றன.
72. எம்பக்கே தேவாலயத்தை அமைத்த மன்னன்.
1) 4ம் புவனேகபாகு
2) 2ம் விஜயபாகு
3) 2ம் புவனேகபாகு
4) 2ம் பராக்கிரமபாகு
73. இலங்கைக்கு வருகை தந்து தமது நேரடி அனுபவங்கள் மூலம் இலங்கை தொடர்பான வரலாற்றுத்தகவல்களை முன் வைத்த வெளிநாட்டு அறிஞர்கள் உள்ளடங்கிய விடைத்தொகுதியைத் தெரிவு செய்க.
1) ஹியுங்சாங்பிக்கு, பர்னாவோ குவேரோஸ்
2) ரிபைரோ, பிளினி
3) இனப்பதூதா, பிலிப்ஸ்டியஸ்
4) ரொபட் நொக்ஸ், மெகஸ்தனிஸ்
74. 1ம் விஜயபாகு மன்னன் பகைவர்களால் துன்பப்பட்ட போது அவருக்கு உதவிய நபர்.
1) கித்தநகரகிரி
2) ஜகத்விஜய
3) லங்காபுர
4) சித்தாரும்பி புத்தநாயக்க
75. வட இந்திய வர்த்தகர்களால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட “ஹஸ்எபு” என்னும் நாணயத்தினைச் செய்வதற்குப் பயன்படுத்திய உலோகம்.
1) தங்கம்
2) வெள்ளி
3) செப்பு
4) தகரம்
76. மகாவிகாரையில் தங்கியிருந்து திரிபீடக நூலுக்கு மேலதிக விளக்கமாக அட்டுவாக்களை எழுதியவர்.
1) மகாநாமதேரர்
2) வாரியப்பொல ஸ்ரீ சுமங்கலதேரர்
3) வீதாகம மஹாஸ்தவீர தேரர்
4) புத்தகோசதேரர்
77. மகாவம்சத்தில் குறிப்பிட்டுள்ளபடி இலங்கையை ஆண்ட முதல் மன்னன்.
1) விஜயன்
2) பண்டுகாபயன்
3) துட்டகைமுனு
4) வசபன்
78. வல்லிபுர பொற்சாசனத்தைப் பொறிப்பித்த மன்னன்.
1) 1ம் விஜயபாகு
2) வசபன்
3) சங்கிலியன்
4) பரராசசேகரன்
79. கிரேக்க இனத்தவரான குளோடியஸ் தொலமி அவர்களால் வரையப்பட்ட உலகப்படத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்ட பெயர்.
1) செரண்டிப்
2) லங்கா
3) தப்ரபேன்
4) சிலோன்
80. பின்வரும் நூல்களில் பாளி மொழி நூல் அல்லாதது எது?
1) மகாவம்சம்
2) அட்டஹதா
3) சமந்தபாசதிகாவ
4) நிகாயசங்கிரகய
81. மகாநாமரேரரால் எழுதப்பட்ட மகாவம்ச நூலின் பாட்டுடைத் தலைவன்.
1) பண்டுகாபயன்
2) தேவநம்பியதீசன்
3) துட்டகாமினி
4) வட்டகாமினி
82. திரிபீடகம் நூல் வடிவம் பெற்ற விகாரை எது?
1) மகாவிகாரை
2) அளுவிகாரை
3) அபயகிரி விகாரை
4) கிரிவிகாரை
83. தப்ரபேன், செரண்டிப், தம்பபன்னி என இலங்கையை அழைத்த அந்நிய இனத்தவர்கள் முறையே,
1) கிரேக்கர், இந்தியர், அராபியர்
2) கிரேக்கர், அராபியர், இந்தியர்
3) அராபியர், கிரேக்கர், இந்தியர்
4) இந்தியர், கிரேக்கர், போர்த்துக்கேயர்
பின்வரும் யு தொடக்கம் துவரையிலான தகவல்களைப் பயன்படுத்தி வினாக்களுக்கு விடை தருக.
A–தொலமி B– அரிஸ்ரோட்டில் C– யுவாங் சுவான்
D–பிளினி E– பாகியன் F - இபன் பதுதா
G– மெகஸ்தனிஸ் H – கௌடில்யர் I – கியூங் சாங்
84. கிரேக்க வராற்றுக் குறிப்பு எழுத்தாளர்களை உள்ளடக்கிய தொகுதி.
1) ABD 2) ABG 3) ADG 4) AHI
85. சீன யாத்திரிகர்களை உள்ளடக்கிய விடைத்தொகுதி.
1) ECI 2) ABD 3) HCF 4) GAF
86. ‘வம்சத்தப்பகாசினி’ என்பது எந்த வரலாற்று நூலுக்கு எழுதப்பட்ட ரை நூல் (டீகாவ) ஆகும்?
1) தீபவம்சம்
2) மகாவம்சத்தின் முதலாம் பாகம்
3) தூபவம்சம்
4) போதிவம்சம்
87. புராதன காலத்தில் இலக்கிய, சமயத் தகவல்கள், வம்சக் கதைகள் என்பன எழுதப்பட்டிருப்பது.
1) ஓலைகளிலான ஏட்டுச்சுவடிகளில்
2) கற்பலகைகளில்
3)கற்குகை நீரிவடி விளிம்புகளில்
4) தங்க, செப்பேடுகளில்
88. இலங்கையின் தேசிய மரபுரீதியான தொல்பொருட்களை மேற்வருவனவற்றுள் எந்தக் காரணத்திற்காகப் பாதுகாக்க வேண்டும்?
1) எதிர்கால சந்ததியினருக்குக் காட்ட வேண்டுமென்பதனால்
2) இலங்கையின் தனித்துவத்தை எடுத்துக்காட்டாக் காரணமாக அமைந்துள்ளதனால்
3) சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்திற்குக் காரணமாக அமைவதனால்
4) கடந்தகால ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் பற்றிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதனால்
89. வரலாற்றைக் கற்பதன் மூலம் கிடைக்கும் பயன்பாடு அல்லாதது பின்வருவனவற்றுள் யாது?
1) தான் வாழும் சமூகம் மற்றும் உலகம் பற்றிய புரிந்துணர்வைப் பெறல்.
2) இறந்த கால அனுபவங்கள் நிகழ காலத்தைப் புரிந்து எதிர்காலத்தை சிறப்பாக திட்டமிட உதவும்.
3) நாட்டின் தேசிய தனித்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
4) தர்க்க ரீதியான சிந்தனைகள் தோற்றம் பெற்றமை.
90. அனுராதபுரத்திலுள்ள மகாவிகாரைக்கு உரித்தான பிரிவெனாக்களில் உள்ளடங்காத பிரிவெனா பின்வருவனவற்றுள் யாது?
1) திக்சந்த பிரிசெனவிய பிரிவெனா
2) சுன்ஹாத்த பிரிவெனா
3) மருகத பிரிவெனா
4) சுனேத்திராதேவி பிரிவெனா
91. தனது அனுபவத்திலிருந்து கண்டி இராச்சியம் தொடர்பான தகவல்களைக் கொண்ட நூலொன்றை எழுதியவர்.
1) பல்டியஸ்
2) ரிபெய்ரோ
3) றொபட் நொக்ஸ்
4) குவேரோஸ் அடிகளார்
92. பிரஜை ஒருவராக வரலாற்று அறிவை மிக வினைத்திறனாகப் பயன்படுத்த வேண்டியது.
1) இலங்கையின் கடந்தகால சிறப்பைக் கற்பதற்காக
2) பழமையான தொழினுட்ப அறிவை நவீனமயப்படுத்தப் பயன்படுத்துவதற்காக
3) கடந்த காலங்களில் செய்யப்பட்ட தவறுகளை மீண்டும் செய்யாதிருப்பதற்காக
4) கடந்த காலத்தைக் கொண்டு கொண்டு நிகழ்காலத்தை விளங்கிக் கொண்டு எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்வதற்காக.
93. இலங்கையின் மிக நீண்ட கல்வெட்டைப் பொறித்த மன்னனையும் அக்கல்வெட்டு காணப்படும் மாவட்டத்தினையும் தரும் விடை.
1) 1ம் விஜயபாகு - பொலன்னறுவை
2) 3ம் விஜயபாகு – தம்பதெனியா
3) கீர்த்தி ஸ்ரீ நிஸ்ஸங்கமல்லன் - பொலன்னறுவை
4) 2ம் பராக்கிரமபாகு – தம்பதெனியா
மேல்வரும் அட்டவணையில் யு தொடக்கம் து வரையில் தரப்பட்டுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விடை தருக.
இலங்கை பற்றித் கலத்துத்
தெரிவித்தவர்கள் தாய்நாடு இலக்கியம்
A. பாகியன் D. போர்த்துகேயர் G. அன்றைய இலங்கை
B. ரிபைரோ E. சீனா H. இலங்கை வரலாறு
C. ரொபட்நொக்ஸ் F. இங்கிலாந்து I. பயணக்குறிப்பு
94. 5ம் நூற்றாண்டளவில் இலங்கைக்கு வருகை தந்து அபயகிரி விகாரையில் தங்கியிருந்து இலங்கை பற்றிய குறிப்புக்களை எழுதியவரின் நூலையும், அவரது தாய்நாட்டினையும் தரும் விடை.
1) EG 2) EI 3) FB 4) BH
95. இலங்கை அனுபவங்களை வைத்து நூலை எழுதிய ரொபட்நொக்ஸின் தாய் நாடும் அவர் எழுதிய நூலையும் தரும் விடை.
1) FG 2) IB 3) BH 4) FH
96. இலங்கை வரலாற்றில் எழுந்த முதலாவது பாளி இலக்கியம்.
1) தீபவம்சம்
2) மகாவம்சம்
3) சூளவம்சம்
4) போதிவம்சம்
97. “டிமுண்டோ” என்ற கிரேக்க நூலின் ஆசிரியர்.
1) மெகஸ்தனிஸ்
2) அரிஸ்ரோட்டில்
3) தொலமி
4) பெரிப்ல்ஸ்மாரிஸின்
98. இலங்கைத்தீவின் வரலாற்றுத் தொடர்பு என்ற நூலின் ஆசிரியரான றொபேட் நொக்ஸின் தாயகம்.
1) போர்த்துக்கல் 2) உரோம் 3) பிரித்தானியா 4) கிரேக்கம்
99. இலங்கையின் புராதன நாணயத்திற்கு வழங்கப்பட்ட பெயர்.
1) “கம்பமஸ்ஸ” 2) “அக” 3) சுவஸ்திகா 4) கஹபண
100. “தம்பமஸ்ஸ” என்னும் செப்பு நாணயம் பயன்படுத்தப்பட்டது.
1) அநுராதபுர காலம்
2) தம்பதெனியாக் காலம்
3) பொலனறுவைக்காலம்
4) கம்பளைக் காலம்
Post a Comment