101.கண்டி இராச்சிய பிரதானிகளுக்கிடையே முரன்பாடு ஏற்பட்டமைக்கான காரணங்கள் 02ஐ குறிப்பிடுக?
102.ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனுக்கும் பொதுமக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டமைக்கான காரணங்களை குறிப்பிடுக?
103.இயற்கை பாதுகாப்பு மிக்க கண்டி இராசதானி வீழ்ச்சியடைந்தமைக்கான பிதான காரணிகள் 03ஐ குறிப்பிட்டு விளக்குக?
104.ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனுக்கு எதிராக சப்ரகமுவ பகுதிக்கு கிளர்ச்சி செய்த பிரதானி யார்?
105.ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னனின் காலத்தில் கண்டி நகரை அலகு படுத்த வருகை தந்த மக்களின் பிரதேசங்கள்02ஐ குறிப்பிடுக?
106.எகலபொல பிரதானியின் குடும்பத்தை கொடூரமாக கொலை செய்த மன்னன் யார்?
107.எஹலபொல குடும்பம் கொடூரமான முறையில் மன்னன் கொலை செய்யக் காரணமாவது?
108.1815 ஆம் ஆண்டு கண்டியில் காணப்பட்ட குழப்பகரமான நிகழ்வுகளை தங்களுக்குரிய சர்ந்தர்ப்பமாக பயன்படுத்திய பிரித்தானிய ஆளுநர் யார்?
109.பிரித்தானியரிடம் தஞ்சமடைந்த எகலபொலவிடமிருந்து தந்திரமான முறையில் தகவல்களை பெற்ற ஆளுநர் யார்?
110.கண்டி இராச்சியத்தின் தகவல்களை உளவு பார்த்து வழங்கிய அதிகாரி யார்?
111.தோமஸ் மெயிட்லண் மூலம் கண்டியின் தகவல்களை அறிய நியமிக்கப்பட்ட ரெசிடன் அதிகாரி யார்?
112.ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனின் மனைவி யார்?
113.ஆளுநர் ரொபட் பிரவுண்றிங் கண்டி மீது படையெடுக்க தகவல்களை வழங்கிய பிரதானியை குறிப்பிடுக?
114.ஆளுநர் ரொபட் பிரவுண்றிங் கண்டி மீது படையெடுக்க தகவல்களை வழங்கிய பிரித்தானிய அரச அதிகாரியை குறிப்பிடுக?
115.1815 ஆம் ஆண்டு கண்டியை கைப்பற்றுவதற்கு ரொபட் பிரவுன்றிங் அனுப்பிய படைகளின் எண்ணிக்கை யாது?
116. 1815 ஆம் ஆண்டு கண்டிக்குள் பிரவேசித்த ரொபட் பிரவுன்றிங்கின் படைகள் புறப்பட்டுச் சென்ற இடங்கள் 05ஐ குறிப்பிடுக?
117.1815 ஆம் ஆண்டு ஆங்கில படையெடுப்பின் காரணமாக மெதமகாநுவரையில் ஒழிந்து கொண்ட இருவரை குறிப்பிடுக?
118.ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னனும் அவனது மனைவியும் மறைந்திருந்த இடம் எது?
119. 1815 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் உட்பட அவனது மனைவியையும் பாதுகாப்பாக கொழும்புக்கு அழைத்து வந்த அதிகாரி யார்?
120. 1816 ஆம் ஆண்டு இந்தியாவின் வேலூர் நகர் சிறைக்கு நாடு கடத்தப்பட்ட கண்டி மன்னன் யார்?
121.ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னன் மரணமடைந்த இடம் எது
122.ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் மரணமடைந்தமைக்கான காரணம் யாது?
123.போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆகியவரால் கைப்பற்ற முடியாத கண்டி இராச்சியத்தை கைப்பற்றிய ஐரோப்பியர் யார்?
124.கண்டி உடன்படிக்கை கைச்சாத்திட்ட ஆண்டைக் குறிப்பிடுக?
125.ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னனை பிரித்தானியர் கைது செய்யும் படத்தை காட்சிப்படுத்துக?
126.ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னனின் மனைவியின் படத்தை காட்சிப்படுத்துக?;;;
127.கண்டி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் “ஆங்கிலயருக்கு இந் நாட்டில் உரிமை இல்லை” எனக் கூறிய தேரர் யார்?
128.ஆங்கிலப் படை வீரனால் ஏற்றப்படட பிரித்தானியக் கொடியை கீழிறக்கி சிங்கக் கொடியை மேலேற்றிய தேரர் யார்?
129.கண்டி இராச்சியத்தை பிரித்தானியர் கைப்பற்றும் காலப்பகுதியில் பிரித்தானியாவில் இருந்து மன்னன் யார்?
130.கண்டி ஒப்பந்தத்தில் 03ம் ஜோர்ச் மன்னன் சார்பாக கையொப்பம் இட்ட ஆளுநர் யார்?
131.கண்டி உடன்படிக்கையில் கண்டியருக்கு சார்பாக கையொப்பமிட்ட நபர்?
132.பிரதானிகள் சிலர்கள் கண்டி உடன்படிக்கையில் 1815 மார்ச் 10 ஆம் திகதி கையொப்பமிட்டனர் என தனது நாற்குறிப்பில் எழுதிய ஆங்கில அதிகாரி யார்?
133.கண்டி உடன்படிக்கையில் காணக்கூடிய உறுப்புரைகளின் எண்ணிக்கை யாது?
134.கண்டி உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வை காட்சிப்படுத்துக?
135.திருகோணமலைத் துறைமுகத்தை பாதுகாப்பதற்காக பொறுத்தப்பட்டிருந்த பீரங்கியை காட்சிப்படுத்துக?
136.திருகோணமலைத் துறைமுகத்தை காட்சிப்படுத்துக?
137.1815 கண்டி உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பிரதானிகள் 05ஐ குறிப்பிடுக?
138.1815 ஆம் ஆண்டு கண்டி உடன்படிக்கையில் காணக்கூடிய உறுப்புரைகளில் 04ஐ குறிப்பிடுக?
139.கண்டி அரச சபையான மகுல்மடுவ மண்டபத்தை காட்சிப்படுத்துக?
சுதந்திரப் போராட்டம்
140.பிரித்தானியர் கண்டி இராச்சியத்தை கைப்பற்றிய பின்னர் இலங்கை மக்களால் ஆங்கில ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் 02ஐ குறிப்பிடுக?
141.1818 ஆம் ஆண்டு சுதந்திரப் பொராட்டத்திற்கு கூறப்படும் வேறு பெயர்கள் 04ஐ குறிப்பிடுக?
142.1818 சுந்திரப் போராட்டத்திற்கு வழிவகுத்த காரணங்கள் 05ஐ குறிப்பிடுக?
143.பிரித்தானியரால் ஊவா வெல்லஸ்ஸ முகாந்திரப் பதவிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரி யார்? அவரின் இனத்தை குறிப்பிடுக?
144.1818 சுதந்திரப் போராட்டத்தின் உடனடிக் காரணம் எது?
145.1818 சுதந்திரப் போராட்டத்தின் போத மன்னனாக்கப்பட்டவர் யார்?
146.1818 கிளர்ச்சியின் போது முகாந்திரம் ஹஜ்ஜிமரைக்கார் கைது செய்ய சென்ற நபர் யார்?
147.1818 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது கொலை செய்யப்பட்ட வெல்லஸ்ஸ முகாந்திரம் யார்?
148.1818 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் கொலை செய்யப்பட்ட பதுளையின் அரசாங்க அதிபர் யார்?
149.1818 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் துறைசாமியை கைது செய்ய சென்று கிளர்ச்சியாளர்களால் கொலை செய்யப்பட்ட லெப்டினன்ட் யார்?
150.1818 ஆம் ஆண்டு கிளர்ச்சி காலத்தில் ஊவா பிரதேசத்திற்கு பொறுப்பாக இருந்த திசாவை யார்?
Post a Comment