இலங்கையின் கரையோர பிரதேசங்கள் ஒல்லாந்தர் ஆட்சிக்கு உட்படுதல் 01

 01. இலங்கையை ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் மூவரைக் குறிப்பிடுக?

         *போர்த்துகேயர்

          *ஒல்லாந்தர் 

          *பிரித்தானியர் 

02. இலங்கையை கைப்பற்றிய ஐரோப்பியர்கள் மூவரை குறிப்பிடுக?

          *போர்த்துகேயர்

          *ஒல்லாந்தர் 

          *பிரித்தானியர்  

03. இலங்கையை கைப்பற்றுவதில் ஆர்வம் கொண்ட ஐரோப்பியர்கள் 04ஐ குறிப்பிடுக? 

           *போர்த்துகேயர்

           *ஒல்லாந்தர் 

           *பிரித்தானியர்

           * பிரான்சியர்

 04. போர்த்துக்கேயரை இலங்கையை விட்டு வெளியேற்ற ஒல்லாந்தரின் உதவியைப் பெற்ற கண்டி மன்னன்?

            * முதலாம் விமல தர்ம சூரியன் 

       ஒல்லாந்தர் ஆட்சிக்கு வருதல். 

05. போர்த்துக்கேயரின் தலைநகரம் எது?

       *லிஸ்பன் 

06. 16ம் நூற்றாண்டில் ஆசிய வலயத்திலிருந்து போர்த்துக்கேயரால் கொண்டுவரப்பட்ட வர்த்தகப் பொருட்களை லிஸ்பன் துறைமுகத்திலிருந்து விலை கொடுத்து வாங்கிய ஐரோப்பியர் யார்? 

        *ஒல்லாந்தர்

07. 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரிடமிருந்து வர்த்தக பொருட்களை விலை கொடுத்து வாங்கி ஏனைய ஐரோப்பியர்களுக்கு விற்பனை செய்த ஐரோப்பியர் யார்?

         *ஒல்லாந்தர்

08. 16ம் நூற்றாண்டில் ஸ்பானியர்களின் கீழ் கட்டுப்பட்டிருந்த ஐரோப்பியர் யார்? 

        *ஒல்லாந்தர்

09. ஐரோப்பியர் ஸ்பானியர் பின்பற்றிய சமய பிரிவு எது?

                 *கத்தோலிக்கம் 

10. ஐரோப்பாவில் ஒல்லாந்தர் பின்பற்றிய சமய பிரிவு எது? 

                * புரட்டஸ்தாந்து

11. ஒல்லாந்தர் ஸ்பானியருக்கு எதிராக சுதந்திரப் போராட்டம் மேற்கொண்டமைக்கான பிரதான காரணம் யாது?

               * மத ரிதியான்ன பிரச்னைகள்

 12. அரச உரிமைப் பத்திரத்தின் மூலம் போர்த்துக்களுக்கு அரசரான ஸ்பானிய மன்னன் யார்?

              * இரண்டாம் பிலிப்ஸ்

 

13. ஒல்லாந்தர் மத சுதந்திரத்திற்கான போராட்டத்தை எவர்களுக்கு எதிராக மேற்கொண்டனர்? 

             *ஸ்பானியர்கள்

14. ஒல்லாந்தர் லிஸ்பன் துறைமுகத்திற்கு வருவதை தடை செய்த ஸ்பானிய மன்னன்? 

            * இரண்டாம் பிலிப்ஸ் 

15. ஒல்லாந்தர் ஆசியாவிற்கு வருவதற்கான அடிப்படை காரணம் யாது? 

            * அவர்களது வர்தகதிக்கு தேவையான வாசனை பொருட்களை                பெற்றுக்கொள்ள

16. ஆசியாவிற்கு வருவதற்கான கடல்வழி தொடர்பான விளக்கத்தை ஐரோப்பியர் அறிந்து கொள்வதற்கு தடைவிதிக்க நடவடிக்கை மேற்கொண்டவர்கள் யார்? 

              * ஐரோப்பியர்கள்

17. போர்த்துக்கேயர் தங்களுடைய கப்பலில் ஆசியாவிற்கு வருவதை தடை செய்த நாட்டவர்கள் மூவரைக் குறிப்பிடுக? 

           *ஒல்லாந்தர் 

           *பிரித்தானியர்

           * பிரான்சியர்

18. 1505 இல் ஒற்றர்கள் மூலம் ஆசியாவிற்கு செல்லக் கூடிய கடல்வழியை அறிந்து கொண்ட நாட்டவர்கள் யார்?

             *ஒல்லாந்தர் 

19. 1602 இல் ஆசியாவிற்கு வருகை தந்த வர்த்தக குழுக்களின் தாய் நாடு எது? 

             * ஒல்லாந்து 

20. ஆசியாவிற்கு முதன் முதலாக வருகை தந்த ஒல்லாந்து வர்த்தக சங்கங்களின் நிலைகளை குறிபிடுக? 



21. ஆசியாவில் போட்டியுடன் செயற்பட்ட வர்த்தக சங்கங்களை இணைத்து உருவாக்கப்பட்ட அமைப்பு எது? 

         *VOC சங்கம் 

22. ஆசியாவில் ஒல்லாந்து கீழைத்தேச வர்த்தக சங்கத்தை (VOC) ஒல்லாந்து ஆட்சியாளன் நிறுவிய ஆண்டை குறிப்பிடுக? 

           *கி .பி16௦2

23. ஆசியாவில் நிறுவப்பட்ட ஒல்லாந்து கீழைத்தேச வர்த்தக சங்கம் பெற்றிருந்த அதிகாரங்களை குறிப்பிடுக?

         * ஒல்லாந்த அரசின் சார்பாக ஆசியாவில் வர்த்தகத்தை  மேற்கொள்ள 

         * நாடுகளை கைபற்றிக்கொள்ள 

         * கோட்டைகளை அமைத்து கொள்ள 

         * ஆளுனர்களை  நியமித்து கொள்ள 

24. ஓல்லாந்தரின் கீழைத்தேச வர்த்தக நிலையம் அமையப் பெற்ற நாட்டையும் இடத்தையும் குறிப்பிடுக? 

          *ஜாவா தீவின் பத்தேவியாவில் 

25. ஒல்லாந்தர் ஆசியாவில் அமைத்த வர்த்தக நிலையத்தின் அதிகாரத்தை நிலை நாட்டிய பிரதேசங்கள் யாவை? 

          * தென்கிழக்கு ஆசிய பிரதேசங்கள்

          * இந்தியாவின் சில பகுதிகள் 

26. ஒல்லாந்தர் இந்து சமுத்திரத்தில் வர்த்தகத்தை கட்டியெழுப்பும் போது கட்டாயமாக மோதிக் கொண்ட ஐரோப்பியர் யார்? 

          * போர்த்துகேயர் 

 கண்டி அரசர்கள் ஒல்லாந்தரின் உதவியை நாடுதல். 

27. 1602ம் ஆண்டு இலங்கையின் மட்டக்களப்பு துறைமுகத்தினூடாக கண்டி மன்னன் சந்தித்த ஒல்லாந்து தூதுக் குழுக்கள் 2ஐ குறிப்பிடுக? 

      * ஜோரிஸ் வான் ஸ்பீல் பேர்ஜன்

       *சி பெல்த  வாட்


28. 1602 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 03 கப்பல்களுடன் மட்டக்களப்பு துறைமுகத்திற்கு வந்த ஒல்லாந்து தளபதி யார்? 

      * ஜோரிஸ் வான் ஸ்பீல் பேர்ஜன்


29. 1ம் விமலதர்ம சூரிய மன்னனை சந்தித்த முதல் ஒல்லாந்து தளபதி யார்? 

      * ஜோரிஸ் வான் ஸ்பீல் பேர்ஜன்


30. 1ம் விமலதர்ம சூரிய மன்னனை சந்தித்த இரண்டாவது ஒல்லாந்து தளபதி யார்? 

       *சி பெல்த  வாட்


31. ஜோரிஸ் வான் ஸ்பீல் பேர்ஜன் எனும் தளபதியை கோலாகலமாக வரவேற்ற கண்டி மன்னன் யார்? 

        * 1ம் விமல தர்மசூரிய மன்னன்

32. 1ம் விமல தர்மசூரிய மன்னனிடம் ஜோரிஸ் வான் ஸ்பீல் பேர்ஜன் எனும் தளபதி முன்வைத்த கோரிக்கை யாது? 

        * போர்த்துகேயரை நாட்டில் இருந்து விரட்டுவதக்கு உதவி புரிவதாக 

33. 1ம் விமலதர்ம சூரிய மன்னனை மரியாதையின்றி பேசிய ஒல்லாந்து தளபதி யார்? 

                *சி பெல்த  வாட்

34. 1602 இல் போர்த்துக்கேயரால் மிகவும் அதிருப்தியடைந்த கண்டி மன்னன் யார்? 

        *1ம் விமல தர்மசூரிய மன்னன்

35. 1ம் விமலதர்மசூரியனால் துரதிஷ்ட வசமாக கொலை செய்யப்பட்ட ஒல்லாந்து தளபதி யார்? 

       *சி பெல்த  வாட்

36. 1ம் விமலதர்ம சூரிய மன்னனின் பின்னர் இரண்டு தடவைகள் ஒல்லாந்தர்கள் சாதகமாக பேசிய போதும் சாதகமான விளைவை பெற முடியாத மன்னனின் காலம் யாது?

    *செனரத் 

37. ஒல்லாந்தரின் இலட்சினையை காட்சிப்படுத்துக? 



1. இதன் பெயர் என்ன?

                *ஒல்லாந்தரின் இலட்சினை

2. இதில் காணப்படும் ஆங்கில எழுத்து யாது? 

                * VOC

3. இதில் காணப்படும் ஆங்கில எழுத்துக்களின் அர்த்தம் யாது? 

                * VOC* &Vereenigde Oost Indische Compagine

4. இவ் இலட்சணைக்குரிய ஐரோப்பியர் யார்? 

                *ஒல்லாந்தர்கள்

5. இவ் இலட்சணையில் உள்ள மிருகம் யாது? 

                 *சிங்கம் , சேவல் 

6. இவ் இலட்சணைக்குரியவர்களின் தாய் நாடு யாது? 

                  * ஒல்லாந்து



38. 1. இதில் உள்ள மன்னன் யார்? 

           *1ம் விமல தர்மசூரிய மன்னன்

    2. இதிலுள்ள தளபதி யார்? 

      * ஜோரிஸ் வான் ஸ்பீல் பேர்ஜன்

   3. இதிலுள்ள மன்னனின் இராச்சியம் எது? 

       * கண்டி

   4. இதிலுள்ள தளபதியின் தாய் நாடு எது? 

       *ஒல்லாந்து 

   5. இதிலுள்ள தளபதி வருகை தரையிறங்கிய துறைமுகம் யாது? 

       *மட்டக்களப்பு

   6. இதிலுள்ள தளபதி எத்தனை கப்பல் குழுவுடன் வருகை தந்தார்? 

       * மூன்று


02ம் இராஜசிங்கனுக்கும் ஒல்லாந்தருக்கும் இடையிலான உடன்படிக்கை 

39. செனரத் மன்னனின் மகனின் பெயர் என்ன? 

         * 02ம் இராஜசிங்கன்

40. போர்த்துக்கேயரை இலங்கையில் இருந்து விரட்டுவதற்கு பலம் வாய்ந்த கடற்படையை கொண்ட ஒல்லாந்தரிடம் உதவியை பெற்ற மன்னன் யார்? 

         * 02ம் இராஜசிங்கன்

41. ஒல்லாந்து உதவியை பெற்றுக் கொள்வதற்கு பத்தேவியாவின் தூதுவர்களுடன் பேச்சு வார்த்தை நடாத்திய மன்னன் யார்? 

          * 02ம் இராஜசிங்கன்

42. ஒல்லாந்தர் வழங்கும் உதவிக்கு கருவா வர்த்தகத்தின் உரிமையையும் கிழக்கில் ஒரு துறைமுகத்தையும் தருவதாக வாக்களித்த மன்னன் யார்? 

         * 02ம் இராஜசிங்கன்

43. போர்த்துக்கேயரை விரட்டுவதற்காக ஒல்லாந்தரின் உதவியை பெற்றுக் கொண்ட மன்னன் யார்? 

         * 02ம் இராஜசிங்கன்

44. ஒல்லாந்தர் வழங்க இருக்கும் உதவிக்காக 02ம் இராஜசிங்கன் வழங்குவதாக வாக்களித்த விடயங்கள் 02ஐ குறிப்பிடுக? 

       * கறுவா வர்த்தகத்தின் உரிமை 

       * கிழக்கு கடற்கரையில் ஒரு துறைமுகம் 

45. 2ம் இராஜசிங்கனின் படையும் ஒல்லாந்து படையும் முதன் முதலாக தாக்கி வெற்றி கொண்ட போர்த்துக்கேய கோட்டை எது? 

        * மட்டக்களப்பு

46. கி.பி. 1638 ஆம் ஆண்டு ஒல்லாந்தருடன் இனைந்து 2ம் இராஜசிங்கன் வெற்றி கொண்ட கோட்டை எது? 

        * மட்டக்களப்பு

47. 02ம் இராஜசிங்கன் மகிழ்ச்சியாக உடன்படிக்கை செய்து கொண்டமைக்கான காரணத்தை குறிப்பிடுக? 

         * மட்டக்களப்பு கோடடையில் இருந்து போர்த்துகேயர் வெளியேறியமையல்

48. 02ம் இராஜசிங்க மன்னன் ஒல்லாந்தருடன் உடன்படிக்கை செய்து கொண்ட ஆண்டைக் குறிப்பிடுக? 

            *1638 

49. 02ம் இராஜசிங்க மன்னன் ஒல்லாந்தருடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் வாசகங்கள் 04ஐ குறிப்பிடுக?

          * போர்துக்கேயரை இலங்கையில் இருந்து வெளியேற்றுவதக்கு  கண்டி மன்னனுக்கு ஒல்லாந்தர்கள் உதவி வழங்க  உடன்படல்

           *

50. போர்த்துக்கேயரை விரட்டும் முயற்ச்சியில் ஈடுபடும் ஒல்லாந்தருக்கு போர் செலவாக இரண்டாம் இராஜசிங்க மன்னன் வழங்க தீர்மானித்த பொருட்கள் 03ஐ குறிப்பிடுக?

         *கறுவா 

          * மெழுகு

          * தேன் மெழுகு 


******************************S.SHATHURVITHA************************************


Post a Comment