1. இந்து சமுத்திரத்தை கடந்து இலங்கை வந்த நவீன மனிதன் எப்பெயரால் அழைக்கப்படுகிறான்.
1) ஆதிஹோமோசேப்பியன்
2) ஹோமோ நியண்டதாலன்சிஸ்
3) ஹோமோ இரெக்டஸ்
4) ஹோமோ ஹபிலஸ்
2. வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதன் சுற்றாடல் வலயங்களை தெரிவு செய்வதில் முக்கியமாக அமைந்த காரணி.
1) வெப்பநிலை
2) மழைவீழ்ச்சி
3) மண்வளம்
4) தரைத்தோற்ற வேறுபாடு
3. அம்பாந்தோட்டை 125000 ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் எப் பிரதேசத்தில் கல்லாயுதங்களை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் இடம்.
1) புந்தல
2) இராவணஎல
3) பதிராஜவெல
4) கித்துல்கலபெலிலென
4. வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்கள் வாழ்ந்த தாழ்நில ஈரவலயக் குகைகளுள் ஒன்றாக அமைவது
1) அலிகல
2) இராவணஎல
3) பதிராஜவெல
4) பாகியன்கல
5. தாழ்நில ஈரவலயத்தில் வாழ்ந்த மனிதன் அதிகம் விரும்பி உண்ட உணவுகளில் ஒன்றாக காணப்படுவது.
1) காட்டுப்பலா
2) நத்தை
3) தித்தயா
4) மான்
6. செந்நிற கற்களால் உராய்ந்து பூசப்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட கற்கால குகை
1) உடரஞ்சாமடம்
2) பதிராஜவெல
3) பெரகல
4) பாகியன்கல
7. நிலையான குடியேற்றம்இவிவசாயம் ஆரம்பம் போன்ற முக்கிய அம்சங்கள் தோற்றம் பெற்ற காலம்.
1) வரலாற்றுக்கு முற்பட்டகாலம்
2) ஆதிவரலாற்று காலம்
3) முன் வரலாற்று காலம்
4) வரலாற்று காலம்
8. கி.மு 700-450 ஆம் ஆண்டுக்குரியதான பிரபுக்கள் பயன்படுத்தியதாக கருதப்படும் கல்லறை மயானம்.
1) பெல்லன்பதிபெல்லஸ்ஸ
2) இராவணஎல
3) இபன்கட்டுவ
4) உடரஞ்சாமடம்
9. முன் வரலாற்று காலத்தில் உடரஞ்சாமடத்தில் வெள்ளை நிறப்பிண்ணியில் சிவப்பு நிறக்கோடுகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட பாத்திரம்.
1) சட்டி
2) குவளை
3) பானை
4) மடக்கு
10. குளத்தை அடிப்படையாக அமைக்கப்பட்ட கிராமம் அழைக்கப்பட்ட விதம்.
1) வாவிகாம
2) எல்லங்காவ
3) பரிகித்தகம
4) வெப்பிரபாதனய
11. 1ம் விஜயபாகுவின் பனாகடுவ செப்பு சாசனத்தில் நுருபுரம் என அழைக்கப்பட்ட தலைநகரம்.
1) பொலனறுவை
2) அனுராதபுரம்
3) தம்பதெனியா
4) சிகிரியா
12. பிராமி கல்வெட்டில் குடும்பத்தலைவன் அழைக்க பயன்பட்ட சொல்.
1) குர்ஹபதி
2) கஹபதி
3) கமிக
4) கிராமிக
13. கி.மு 250 ஆண்டு கல்வெட்டில் புரகமத்த என அழைக்கப்பட்டவரை குறிப்பிட்ட பதம்.
1) படகு துறையை நிர்வகிப்பவர்
2) யானைப்படை நிர்வகிப்பவர்
3) குதிரை படை நிர்வகிப்பவர்
4) வர்த்தகத்துறை நிர்வகிப்பவர்
14. ஆரம்ப வரலாற்றுக்கால குடியேற்றம் தோற்றத்துக்கு காரணமான அமையும் பிரதான சான்றாக காணப்படுவது.
1) கிராமியக்குளங்கள்
2) வெப்பநிலை
3) மழைவீழ்ச்சி
4) மண்வளம்
15. குருநாகல் மாவட்டத்தின் கனேகந்த மற்றும் கல்லேன விகாரை கல்வெட்டுக்களில் அணைக்கட்டு அழைக்கப்படும் விதம்.
1) கலிங்கல்
2) அலைதாங்கி
3) கலிங்கல் தொட்டி
4) அவரண
16. பின்வரும் நிரல்1 இல் தொழற் கிராமங்களும் நிரல்2 அவை அழைக்கப்பட்ட முறைகளும் தரப்பட்டுள்ளது. அவற்றை இணைக்கும் போது சரியாக அமையும் விடைத்தொகுதி
நிரல்1 நிரல்2
1. விவசாயக் கிராமம் யு - கேவட்டகாம
2. வர்த்தகக் கிராமம் டீ- வட்டகீகாம
3. தச்சர் வாழ்ந்த கிராமம் ஊ- நியகம்
4. குயவர் வாழ்ந்த கிராமம் னு- சுசீகரகாம
5. மீனவர் கிராமம் நு- கும்பகாரகாம
1) டீஊனுயுநு
2) னுஊடீநுயு
3) யுஊநுனுடீ
4) னுஊயுநுடீ
17. கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்குரிய குழி தோண்டி மண் பூசப்பட்ட வீட்டின் தளம் அமைக்கப்பட்ட வீடு காணப்பட்ட இடம்.
1) உடஞ்சாடம்
2) அனுராதபுரம்
3) வலகம்பத்து
4) ஹல்துமுல்ல
18. இரும்பு ஆரம்பயுகம் எனக் கருதப்படுவதும் தொழிநுட்ப அடிப்படையில் மாறுநிலை காலமாக கருதப்படும் காலம்
1) வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
2) ஆரம்ப வரலாற்றுகாலம்
3) முன் வரலாற்று காலம்
4) வரலாற்று காலம்
19. கற்கால மனிதன் உணவு தேவைக்காக உப்பு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதரம் கிடைக்கப்பெற்ற குகைகளுள் ஒன்றாக கருதப்படுவது.
1) இராவணஎல
2) பாகியன்கல
3) பெரகல
4) கித்துள்கலபெலிலென
20. ஆரம்ப வரலாற்று காலத்தில் முதன் முதலில் பயிரிடப்பட்ட பயிர்ச்செய்கை மேற்கொண்டனர்.
1) நெற்பயிற்செய்கை
2) மந்தைவளர்ப்பு
3) சேனைப்பயிற்செய்கை
4) வீட்டுதோட்டப் பயிற்செய்கை ()
Post a Comment