இலங்கையின் வரலாற்று மூலாதாரங்கள் Part 02

 

இலங்கையின் வரலாற்று மூலாதாரங்கள் 

01. வரலாற்றைக் கற்பதற்கு இலக்கிய மூலாதாரங்களும் தொல்பொருள் மூலாதாரங்களும் துணை புரிகின்றன.

        ) 1) உள்நாட்டு மூலாதாரங்களில் கி.பி 4ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?

2) தொல்பொருள் மூலாதார வகைகளுள் இரண்டை எழுதுக.

      ) பின்வரும் இலக்கியங்களுடன் தொடர்புடையவர்களை அடைப்புக்குள் தெரிக.

 1)சீன இலக்கியம் - ...............                         2) அரபு இலக்கியம் - ..............

3) போர்த்துக்கேய இலக்கியம் - .........     4) ஒல்லாந்து இலக்கியம்

(பாஹியன், ரிபைரோ, பிலிப்புல்டியஸ், இபின்பதூதா, தொலமி)

        இ) 1) கருங்கல்லில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் அதன் அமைப்புக்கேற்ப வழங்கப்படும் பெயர்கள் இரண்டு தருக.

2) கல்வெட்டின் மூலம் நாம் பெற்றுக் கொள்ளக்கூடிய பயன்கள் 3 எழுதுக.

        ஈ) பின்வருவன பற்றி இவ் இரண்டு விடயங்கள் எழுதுக.

1) புராதன சிதைவுகளின் பயன்கள்

2) இலக்கிய மூலாதாரங்களின் பயன்கள்

3) வரலாற்றைக் கற்பதன் பயன்கள்


02. ) கீழே குறிப்பிடப்படும் வரலாற்று நூல்களின் ஆசிரியர்களைக் குறிப்பிடுக.

1) இண்டிகா 

2) பூகோள சாஸ்திரப் பிரவேசம்

   ) இலக்கிய மூலாதாரங்களைப் பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களில் நான்கினைத் தருக.

   ) நாணயங்கள் மூலம் அறியக்கூடிய விடயங்களில் இரண்டினைக் குறிப்பிட்டு விளக்கக.

   ) வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு இலக்கிய மூலாதாரங்களைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் மூன்றினைக் குறிப்பிட்டு விளக்குக.


03. ) ABC எனக் குறிப்பிட்டிருக்கும் இலக்கியங்களை எழுதியவர்களைத் தருக.

A. டிமுண்டோ

B. இண்டிகா

C. நெச்சுரலிஸ் ஹிஸ்டோரியா

    ) புராதன இலங்கையில் எழுத்தாவணங்கள் எழுதப்பயன்பட்ட சாதனங்கள் நான்கு தருக.

    ) நாணயங்களின் மூலம் அறியப்படும் தகவல்கள் இரண்டினைக் குறிப்பிட்டு விளக்குக.

    ) தொல்பொருள் மூலாதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்கள் மூன்றினைக் குறிப்பிட்டு விளக்குக.


04. ) இலக்கிய மூலாதாரங்களை பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டி விடயங்கள் மூன்று தருக.

      ) கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் நான்கு தருக.

      ) வரலாற்றக்கு முற்பட்ட காலத்தை கீழ்வரும் தலைப்புக்களின் அடிப்படையில் விளக்குக.

1) குடியிருப்புக்களின் அடிப்படை இயல்புகள்

2) தொழில்நுட்பம்


05. ) பின்வருவனவற்றை இலக்கிய மூலாதாரங்கள் தொல்பொருள் மூலாதாரங்கள் என இருவகைப் படுத்துக?

தீபவம்சம், தொலமியின் உலகப்படம், சிகிரியா, வல்லிபுர பொற்சாசனம், கோகில சந்தேசய, ரகுவம்சம்,பொலநறுவை சிவன் கோவில், ஹோப்பிட்டிகமுவ தூண்சாசனம்

     ) இலக்கிய மூலாதாரங்களில் உள்ளடக்கப்படுபவை நான்க தருக.

     ) கற்கால மனிதரின் உடலமைப்பு எவ்வாறு காணப்பட்டது என தொல்பொருட் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன என சுருக்கமாக குறிப்பிடுக.

     ) கற்கால மனிதனது மூதாதையினர் பயன்படுத்திய உணவுப் பழக்க வழக்கங்களை விபரிக்குக? 


06. ) கோட்டை இராசதானி முதல் கண்டி இராசதானி வரையான வரலாற்றை அறிந்து கொள்ள உதவிய நூல்கள் மூன்று தருக.

     ) இலக்கிய மூலாதாரங்களால் கிடைக்கும் நன்மைகள் நான்கு தருக.


07. ) இலங்கை பற்றிய தகவல்கள் அடங்கிய தென்னிந்திய இலக்கியங்கள் மூன்றினைக் குறிப்பிடுக?

     )   1) கோட்டை இராசதானி முதல் கண்டி இராசதானி வரையான காலப்பகுதியை அறிய உதவும் தூதுகாவியங்கள் இரண்டு தருக?

            2) இலங்கைக்கு வருகை தராது இலங்கைக்கு வருகை தந்தவர்களிடம் இருந்து தகவல்களைக் கேட்டறிந்து நூல்களை எழுதிய கிரேக்க நாட்டு எழுத்தாளர்கள் இருவரின் பெயர்களைத் தருக.

   ) இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து முன்வரலாற்றுக்காலம் வேறுபடும் முறையை இரண்டு காரணிகளைக் குறிப்பிட்டு பிவரிக்குக.

     ) வரலாற்றுக் கால இலங்கையில் விவசாயம் மேற்கொள்ள்பபட்ட முறையினைத் தெளிவுபடுத்துக?


08. ) கீழே குறிப்பிடப்படும் வரலாற்று நூல்களின் ஆசிரியர்களைக் குறிப்பிடுக.

1) மெகஸ்தனிஸ் 

2) பூகோள சாஸ்திரப் பிரவேசம்

    ) இலக்கிய மூலாதாரங்களைப் பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களில் நான்கினைத் தருக.

    ) கல்வெட்டுக்கள் மூலம் அறியக்கூடிய விடயங்களில் இரண்டினைக் குறிப்பிட்டு விளக்குக.

    ) வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு இலக்கிய மூலாதாரங்களைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் பிரதிகூலங்கள் மூன்றினைக் குறிப்பிட்டு விளக்குக.


09.   ) இலங்கை வரலாற்றை அறிவதற்கான இலங்கைக்கு வருகை தந்து நேரடி அனுபவங்களைப் பெற்று எழுதிய எழுத்தாளர்களின் தேசங்கள் காட்டப்பட்டுள்ளன. அவர்களுடைய பெயர்களை

அடைப்புக்குறிக்குள் இருந்து தெரிவு செய்து ஒழுங்கு முறைப்படி எழுதுக.

A–சீனா

B– போர்த்துக்கல்

C–ஒல்லாந்து       

(இபின்பதுதா, பாகியன் தேரர், ரிபைரோ, ரொபட் நொக்ஸ், பிலிப்ஸ் பல்டியஸ்)

    ) மகாவம்சம ;, தீபவம்சம் என்பவற்றிற்கும் காலத்தால் முந்தியதாகக் கருதப்படும் நூல்கள் இரண்டைக் குறிப்பிடுக.

    ) இலக்கிய மூலாதாரங்களை பயன்படுத்தும் பொழுது கவனிக்க வேண்டிய விடயங்கள் மூன்றைக் குறிப்பிட்டு ஒன்றை விளக்குக.

    ) தொல்பொருள் மூலாதாரங்களின் மூன்று சிறப்புக்களை இலக்கிய மூலாதாரங்களுடன் ஒப்பிட்டு எழுதுக.


10. ) கீழே தரப்பட்ட நூல்களின் ஆசிரியர்களை எழுதுக.

A–டிமுன்டோ

B - இண்டிகா

C–நெச்சுரலிஸ் ஹிஸ்டோரியா

    ) மூலாதாரங்களைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள் 4 தருக.

    ) வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு இலக்கிய மூலாதாரங்களைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் இரண்டை விளக்குக.

    ) இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்டகால மனிதன் தனது வாழ்விடங்களாக வெட்ட வெளிகள், கற்குகைகளைப் பயன்படுத்தினான் என்பதை உதாரணத்துடன் விளக்குக



Post a Comment