பகுதி 2
01 மிசனரி என்றால் என்ன?
* இலங்கையில் சமயத்தை பரப்பும் நோக்குடன் அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமைப்புக்கள் மிசனரி எனப்படும்.
02 மிசனரிகள் சமயத்தைப் பரப்புவதற்கு கையாண்ட வழிமுறைகள் எவை?
* கல்வி, போதனை, சமூக சேவை
03 கல்வியினுடாக கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதற்கு மிசனரிகள் மேற்கொண்ட முயற்சிகள் எவை?
*தமிழ் சிங்கள மொழிகளை கற்றுக் கொண்ட இவர்கள் கிராமிய பாடசாலைகளில் சுதேச மொழிகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு நகர்ப்புற பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமான கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
*மிஷனரி கல்வி சமயத்தை பரப்புவதற்கும் மேலே தேய நாகரீகத்தை இந்நாட்டில் சமூக மயப்படுத்தவும் பயன்படுத்திக்கொண்டனர்.
*பிரித்தானியர் ஆட்சியில் அரசாங்கத்தில் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஆங்கில மொழி அறிவு அவசியமாக இருந்தது இதன் விளைவாக ஆங்கில மொழி மூலம் கற்ற சிங்கள தமிழ் பிரபத்துவ குடும்பங்களை சேர்ந்த வாலிபர்களில் ஒரு பகுதியினர் தமது பரம்பரையான சமயத்திலையும் பெயர்களையும் கைவிட்டுவிட்டு கிறிஸ்தவ சமயத்தை தழுவிக் கொண்டு அரசாங்கத்தில் உயர் பதவிகளை பெற்றுக் கொண்டனர்
*மிஷனரி இயக்கத்தினர் இலங்கையினுடைய பல்வேறு பிரதேசங்களினையும் தமக்குள் பங்கிட்டு கொண்டு கல்வி போதனைகளில் ஈடுபட்டு வந்தனர் இதனால் இலங்கையில் பல்வேறு இடங்களில் மிஷனரி பாடசாலைகள் தோற்றம் பெற்றன இதனால் ஆங்கில கல்வியும் கிறிஸ்தவ மதமும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் அடைந்தது
04 பிரித்தானியர் காலத்தில் செயற்பட்ட மிசனரிகள் எவை?
*லண்டன் மிஷனரி இயக்கம்
*பெப்டிஸ்ட் மிஷனரி இயக்கம்
*அமெரிக்கன் மிஷனரி இயக்கம்
*வெஸ்லியன் மிஷனரி இயக்கம்
*சேர்ச் மிஷனரி இயக்கம்
05 எழுத்தாக்கங்கள் போதனை ஊடகங்களைக் கையாண்டு மிசனரிகள் சமயத்தைப் பரப்பிய முறைகள் எவை?
*மிஷனரி இயக்கங்கள் இலங்கையில் அச்சகங்களை உருவாக்கிக் கொண்டு தமது சமய கருத்துக்கள் கொண்ட புத்தகங்களை இணையும் சஞ்சிகைளிலும் வெளியிட்டு விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்
*விவிலியத்தையும் கிறிஸ்தவ சமயம் சார்ந்த புத்தகங்களையும் சிங்கள தமிழ் மொழிகளில் மொழிபெயர்த்து மக்கள் மத்தியில் அதனை வெளியிட்டனர்
*இந்து பௌத்த சமயத்தவர்கள் சிலைகளை வணங்கும் போலி நம்பிக்கையாளர்கள் என்றும் அவர்களுடைய சமய வழிபாடுகள் பயனற்றவை என்றும் தங்களுடைய அப்பிராயங்களை இந்த வெளியீடுகள் மூலம் பரப்பினர்
06 மிசனரிகளால் வெளியிடப்ட்ட பத்திரிகைகள் எவை?
*மாசிக்க தேக்க
*உரகல
*லங்கா நிதானய
*உதய தாரகை
07 மிசனரிகள் மேற்கொண்ட சமூகசேவை நடவடிக்கைகள் எவை?
*ஏழை எளிய மக்களுக்கு பரிசு பொருட்களை
*வழங்குதல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல்
08 மிசனரிகளின் செயற்பாடுகள் வெற்றி பெற்றமைக்கான காரணங்கள் எவை?
*அரசாங்க உதவிகள் கிடைத்தல்
*சமயத்தை பரப்புவதற்கு கல்வியை பயன்படுத்திக் கொள்ளல்
*அச்சகங்களை நிறுவுதல்
*புத்தகங்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகள் என்பவற்றை *வெளியிடக்கூடிய நிதி வசதியை கொண்டிருந்தமை
*மிஷனரி காணப்பட்ட கட்டமைப்பு ரீதியான பலம்
09 இலங்கையரிடையே சமய எழுச்சி ஏற்பட்டமைக்கான காரணங்கள் எவை?
*மிஷனரிமாரின் சமயப் பிரச்சாரத்தால் தேசிய சமயங்கள் தாக்கப்பட்டமை.
*சிங்கள தமிழ் மொழிக் கல்வியை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை
*பிரித்தானியரின் ஆட்சியால் தமது சமய கலாச்சாரம் அழிவுறும் எனும் உணர்வு மக்களிடம் தோன்றியமை
10 பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தில் வெளிப்படையாகத் தெரியும் பண்புகள் எவை?
*பிரிவெனாக்கள் (பௌத்த சமயக் கல்வியை போதிப்பவை) ஆரம்பிக்கப்பட்டமை
*அச்சகங்களை அமைத்தமையும் அச்சு ஊடகங்களையும் கையாண்டமை
*விவாதங்கள் மேற்கொண்டமை
*பௌத்த பாடசாலைகள் நிறுவியமை
*தேசிய கலாச்சாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தமை
11 பௌத்த மத மறுமலர்ச்சிக்காக அமைக்கப்பட்ட பிரிவெனாக்கள் எவை?
*இரத்மலானை பரம தம்ம சேதிய பிரிவேனா
*மளிகாந்த வித்யோதய பிரிவென
*பேலிய கொட வித்தியா லங்கார பிரிவேணா
12 பௌத்தர்களால் வெளியிடப்பட்ட பத்திரிகைகள் எவை?
*லக்மினி பஹன
*சிங்கள ஜாதிய
*சரசவி சந்தரேஸ
*சிங்கள பௌத்தயா
13 விவதங்களில் பங்கேற்றவர்கள் பௌத்த பிக்குகள் யாவர்?
*மீக்கெடுவத்த குணானந்த தேரர்
*ஹுக்கடுவை ஸ்ரீ சுமங்கல தேரர்
*வஸ்கடுவே சுபுதி தேரர்
*இரத்மலானை தர்ம லோக தேரர்
14 ஐம்பெரும் விவாதங்களும் நடைபெற்ற இடங்கள் எவை?
* பத்தேகம 1865
*வராகோடா 1865
* உதம்விட 1866
* கம்பளை 1871
*பாணந்துறை 1873
15 பௌத்த பாடசாலைகளை அமைப்பதில் பாடுபட்டவர்கள் யாவர்?
* ஹென்றி ஸ்டில் ஒல்கோர்ட்
*ஹுக்கடுவை ஸ்ரீ சுமங்கல தேரர்
*இரத்மலானை தர்ம லோக தேரர்
*மீக்கெடுவத்த குணானந்த தேரர்
16 இவர்களின் முயற்சியினால் அமைக்கப்பட்ட பாடசாலைகள் எவை?
*கண்டி தர்மராஜா வித்தியாலயம்
*கொழும்பு ஆனந்தா வித்தியாலயம்
* காலி மஹிந்த வித்தியாலம்
* நாவலபிட்டி அனுருத்த வித்தியாலயம்
* கொழும்பு மியூசியஸ் வித்தியாலயம்
17 மறுமலர்ச்சி இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் எவை?
*ஞாயிறு சமய பாடசாலைகளை தொடங்குதல்
*பௌத்த பாடசாலைகளை தொடங்குதல்
*புதிய பாட நூல்களை அச்சிடு வழங்குதல்
*பௌத்த மாணவர்களுக்கு ஆங்கில மொழியினை போதித்தல்
*வெசாக் நோன்மதி தினத்தை விடுமுறை ஆக்கி கொண்டமை
*பௌத்த கொடியை உருவாக்குதல்
18 பௌத்த மத மறுமலர்ச்சிக்காககப் பாடுபட்ட தலைவர்களைக் குறிப்பிட்டு விளக்குக?
* ஹென்றி ஸ்டில் ஒல்கோர்ட்
*ஹுக்கடுவை ஸ்ரீ சுமங்கல தேரர்
*இரத்மலானை தர்ம லோக தேரர்
*மீக்கெடுவத்த குணானந்த தேரர்
19 தேசிய கலாசாரத்தின் மென்மையை உயர்த்துவதற்கு முன்னின்று செயற்பட்டவர்கள் யார்?
* ஹென்றி ஸ்டில் ஒல்கோர்ட்
*ஹுக்கடுவை ஸ்ரீ சுமங்கல தேரர்
*இரத்மலானை தர்ம லோக தேரர்
*மீக்கெடுவத்த குணானந்த தேரர்
20 தேசிய கலாசாரத்தைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எவை?
*மதுபான நிலையங்களுக்கு எதிரக மது விலக்கு இயக்கதை ஆரம்பித்தல்
*பழமையான பௌத்த புனித சின்னங்ளை பாதுகாக்க இயக்கத்தை ஆரம்பித்தால்
*பௌத்த போதனைகளை கருவாக கொண்ட நாடகங்களை இயற்றி மேடை எற்றல்
21 இந்து சமய மறுமலர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எவை?
*அச்சகங்கள் அமைதல்
*புத்தகங்களை அச்சிடல்
*பகிரங்க சொற்பொழிவுகளை நிகழ்த்தி இந்துசமய மக்களுக்கு அறிவுட்டுதல்
*பாடசாலைகளை நிறுவுதல்
22 இந்து சமய மறுமலர்ச்சிக்குப் பாடுபட்ட தலைவர்கள் யாவர்?
* ஸ்ரீ ல ஸ்ரீ ஆறுமுக நாவலர்
*சேர் பொன்னம்பலம் இராமநாதன்
*சேர் பொன்னம்பலம் அருணாசலம்
23 இந்து சமய மறுமலர்ச்சிக்கு ஆறுமுகநாவலர் ஆற்றிய பணிகள் எவை?
* இலங்கையில் இந்துமத மறு மலர்சிக்கு தலைமை தங்கியமை
*இந்து சமய பாடசாலைகளை நிறுவியமை (வண்ணர் பண்ணை சைவபிரகாச வித்தியாலம் )
*இந்து சமயத்தையும் , கலசாரத்தையும், தமிழ் மொழியையும் வளர்த்தல்
*பலபாடம் போன்ற பெயரில் பாட நுல்களை எதியமை
*கந்தபுராணம் ,பெரிய புராணம் எனும் நூல்களை பதிப்பிதமை
24 இஸ்லாமிய மறுமலர்ச்சிக்குப் பாடுபட்டவர்கள் யாவர்?
* அறிஞர் சித்திலெப்பை
*டி.பி ஜாயா
25 இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு அறிஞர் சித்திலெப்பை ஆற்றிய பணிகள் எவை?
*முஸ்லிம் நேசன் எனும் சஞசிகையை எலுதியமாய்
*முஸ்லிம் கல்வி சபையை ஆரம்பித்தால்
*மருதனை ஷாகிரா கல்லூரி மூலமாக சமய போதனைகளை வழங்கியாமை
Post a Comment